சில ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஒரு வலைப்பதிவில் எழுதிக் கொண்டு இருந்தேன். பின்பு அதில் எழுதுவதை நிறுத்திவிட்டேன். இப்போது தான் மீண்டும் பதிவிடத் தொடங்கி இருக்கிறேன். இந்த பதிவு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் என் பழைய ப்ளாகில் எழுதியது. ஆயிரத்து நூறு பார்வைகளைக் கடந்த என் ஒரே பதிவு இது தான். அந்த ப்ளாகை டிலீட் செய்து விட்டதால், தற்போது மீண்டும் 'நாரதன்'இல் சில திருத்தங்களுடனும் மாற்றங்களுடனும் புதிய பாடல்களையும் சேர்த்து பதிவிடுகிறேன்.
இந்த பதிவில் ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்த தமிழ் பாடல்களும், அவை அமைக்கப் பட்ட கர்நாடக ராகங்களையும் பட்டியல் இட்டு உள்ளேன். நான் ரஹ்மானின் பெரிய விசிறி என்பதால் அவரது பாடல்கள் எல்லாமே எனக்கு ஓரளவுக்கு தெரியும். என் பழைய ப்ளாகில் உள்ள பதிவில் விண்ணை தாண்டி வருவாயா பாடல்கள் வரை தான் சேர்த்து இருந்தேன். இந்த பதிவில் 'ரோஜா'வில் ஆரம்பித்து 'லிங்கா'வரை உள்ள பல பாடல்கள் இதில் அடக்கம்.
இந்த பதிவில் ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்த தமிழ் பாடல்களும், அவை அமைக்கப் பட்ட கர்நாடக ராகங்களையும் பட்டியல் இட்டு உள்ளேன். நான் ரஹ்மானின் பெரிய விசிறி என்பதால் அவரது பாடல்கள் எல்லாமே எனக்கு ஓரளவுக்கு தெரியும். என் பழைய ப்ளாகில் உள்ள பதிவில் விண்ணை தாண்டி வருவாயா பாடல்கள் வரை தான் சேர்த்து இருந்தேன். இந்த பதிவில் 'ரோஜா'வில் ஆரம்பித்து 'லிங்கா'வரை உள்ள பல பாடல்கள் இதில் அடக்கம்.
எண் | பாடல் | ராகம் |
1 | மெட்டுப் போடு (டுயட்) | ஆனந்த பைரவி |
2 | அன்பென்ற மழையிலே (மின்சாரக் கனவு) | ஆனந்த பைரவி |
3 | சொல்லாயோ சோலைக்கிளி (அல்லி அர்ஜுனா) | மாயாமாளவகௌளை |
4 | நதியே நதியே (ரிதம்) | ஆனந்த பைரவி |
5 | கண்ணோடு காண்பதெல்லாம் (ஜீன்ஸ்) | ஆபேரி |
6 | உதயா உதயா (உதயா) | சாருகேசி |
7 | தாய் சொன்ன தாலாட்டு (தேசம்) | சாருகேசி |
8 | ஏதோ ஏதோ ஒன்று (எனக்கு 20 உனக்கு 18) | சாருகேசி |
9 | பாய்சை எங்க வைக்காதே (பாய்ஸ்) | ஹம்சத்வனி |
10 | காற்றே என் வாசல் வந்தாய் (ரிதம்) | தர்பாரி கானடா |
11 | ஒட்டகத்த கட்டிக்கோ (ஜென்டில்மேன்) | தர்மவதி |
12 | பாக்காதே பாக்காதே (ஜென்டில்மேன்) | மோகனம் |
13 | எது சுகம் சுகம் (வண்டிச்சோலை சின்னராசு) | தர்மவதி |
14 | மோனாலிசா (மிஸ்டர் ரோமியோ) | காவதி |
15 | நிலா காய்கிறது (ஹமீர் கல்யாணி) | ஹமீர் கல்யாணி |
16 | வெள்ளை பூக்கள் (கன்னத்தில் முத்தமிட்டால்) | ஹம்சத்வனி |
17 | என் காதலே (டூயட்) | ஹரிகாம்போதி |
18 | மார்கழி பூவே (மே மாதம்) | ஹிந்தோளம் |
19 | புது வெள்ளை மழை (ரோஜா) | கானடா |
20 | தீக்குருவி (கண்களால் கைது செய்) | ஹம்சத்வனி |
21 | என்மேல் விழுந்த மழைத்துளியே (மே மாதம்) | காபி |
22 | கப்பலேறிப் போயாச்சு (இந்தியன்) | காபி |
23 | காதல் ரோஜாவே (ரோஜா) | காபி (முதல் ஆலாப் தேஷ் ராகம்) |
24 | டுயட் சாக்ஸ் இசை (டுயட்) | கல்யாண வசந்தம் |
25 | சக்தி கொடு (பாபா) | கல்யானோ |
26 | திறக்காதக் காட்டுக்குள்ளே | கேதார் + நீலாம்பரி |
27 | என் சுவாசக் காற்றே (என் சுவாசக் காற்றே) | கல்யாணி |
28 | என்னவளே (காதலன்) | கேதாரம் |
29 | என்னை காணவில்லையே (காதல் தேசம்) | கீரவாணி |
30 | அஞ்சலி அஞ்சலி (டூயட்) | மாண்டு |
31 | சௌக்கியமா (சங்கமம்) | மாண்டு |
32 | போர்க்களம் (தெனாலி) | மாண்டு |
33 | தோம் கருவில் இருந்தோம் (ஸ்டார்) | மத்யமாவதி |
34 | ஏ முத்து பாப்பா (வண்டிசோலை சின்னராசு) | மத்யமாவதி |
35 | கோலம்பஸ் (ஜீன்ஸ்) | மத்யமாவதி |
36 | ஒரு பொய்யாவது சொல் (ஜோடி) | காபி |
37 | நெஞ்சினிலே (உயிரே) | மிஸ்ர பைரவி ** |
38 | என்ன சொல்லப் போகிறாய் (கண்டுகொண்டேன் கண்டுபோனேன்) | மிஸ்ர கீரவாணி ** |
39 | கையில் மிதக்கும் கனவா நீ (ரட்சகன்) | ஹமீர் கல்யாணி |
40 | ஹலோ மிஸ்டர் எதிர்கட்சி (இருவர்) | நடபைரவி |
41 | சந்திரலேகா (திருடா திருடா) | நடபைரவி |
42 | பூம் பூம் (பாய்ஸ்) | மோகனம் |
43 | ஒருநாள் ஒருபொழுது (அந்திமந்தாரை) | நாடகுறிஞ்சி |
44 | கண்ணாமூச்சி ஏனடா (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்) | நாடகுறிஞ்சி |
45 | மச்சினியே (ஸ்டார்) | பந்துவராளி |
46 | அழகான ராட்சசியே (முதல்வன்) | ரீதிகௌளை |
47 | அழகே சுகமா (பார்த்தாலே பரவசம்) | சஹானா |
48 | சுட்டும் விழிச்சுடர் தான் (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்) | சாரங்கா + ஹம்சானந்தி |
49 | என்வீட்டு தோட்டத்தில் (ஜென்டில்மேன்) | செஞ்சுருட்டி |
50 | நெஞ்சே நெஞ்சே (ரட்சகன்) | சங்கராபரணம் |
51 | என்னுயிர் தோழியே (கண்களால் கைது செய்) | பஹுதாரி |
52 | இன்னிசை அளபெடையே (வரலாறு) | சுத்த தன்யாசி |
53 | மார்கழி திங்கள் அல்லவா (சங்கமம்) | சிந்து பைரவி |
54 | சிநேகிதனே (அலைபாயுதே) | சிந்து பைரவி |
55 | எங்கே எனது கவிதை (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்) | சிந்து பைரவி |
56 | தண்ணீரைக் காதலிக்கும் (மிஸ்டர் ரொமியோ) | சிவரஞ்சனி |
57 | கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் (திருடா திருடா) | சிவரஞ்சனி |
58 | தீண்டாய் மெய் தீண்டாய் (என் சுவாசக் காற்றே) | ஸ்ரீராகம் |
59 | குறுக்கு சிறுத்தவளே (முதல்வன்) | வாஸந்தி |
60 | அடி மஞ்ச கிழங்கே (தாஜ் மஹால்) | வாஸந்தி |
61 | வராஹ நதிக்கரையோரம் (சங்கமம்) | மாண்டு |
62 | விடுகதையா (முத்து) | சக்கரவாகம் |
63 | அன்பே அன்பே (ஜீன்ஸ்) | கரஹரப்ரியா |
64 | மன்மத மாசம் (பார்த்தாலே பரவசம்) | வாஸந்தி + ஹம்சத்வனி |
65 | தங்கத் தாமரை மகளே (மின்சாரக் கனவு) | சிவரஞ்சனி* |
66 | அரபிக் கடலோரம் (பம்பாய்) | பூர்ணகாம்போதி |
67 | தீயில் விழுந்த தேனா (வரலாறு) | வாஸந்தி |
68 | காதல் சடுகுடு குடு (அலைபாயுதே) | நடபைரவி |
69 | நறுமுகையே (இருவர்) | நாட்டை |
70 | நேற்று இல்லாத மாற்றம் (புதிய முகம்) | பிலஹரி |
71 | ஓமனப் பெண்ணே (விண்ணைத் தாண்டி வருவாயா) | பிலஹரி |
72 | ஆரோமாலே (விண்ணைத் தாண்டி வருவாயா) | பாகேஸ்ரீ |
73 | உயிரும் நீயே (பவித்ரா) | கமாஸ் |
74 | காதல் அணுக்கள் (எந்திரன்) | பிலஹரி |
75 | வாங்க மக்கான் வாங்க (காவியத்தலைவன்) | பிலஹரி |
76 | தமிழா தமிழா (ரோஜா) | தர்மவதி |
77 | நியூ யார்க் நகரம் (சில்லுனு ஒரு காதல்) | நடபைரவி |
78 | குலுவாலிலே (முத்து) | யதுகுல காம்போஜி |
79 | மெதுவாகத்தான் (கோச்சடையான்) | கல்யாணி |
80 | மணப்பெனின் சத்தியம் (கோச்சடையான்) | த்விஜாவந்தி |
81 | மணமகனின் சத்தியம் (கோச்சடையான்) | த்விஜாவந்தி |
82 | கொஞ்சும் மைனாக்களே (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்) | பல்லவி மத்யமாவதி, மற்றவை கரஹரப்ரியா |
83 | ஓ நண்பா (லிங்கா) | மாயாமாளவகௌளை |
84 | சம்பா சம்பா (லவ் பர்ட்ஸ்) | மோகனம் |
85 | ஏ மாண்புறு மங்கையே (குரு) | யமன் கல்யாணி |
86 | வெண்ணிலா வெண்ணிலா (இருவர்) | சலநாட்டை |
87 | வெள்ளி மலரே (ஜோடி) | மேக மலஹர் (ஹிந்துஸ்தானி) |
88 | கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்) | நளினாகாந்தி + கடனகுதுகலம் |
89 | சொன்னாலும் கேட்பதில்லை (காதல் வைரஸ்) | நளினகாந்தி |
90 | அன்பின் வாசலே (கடல்) | சாருகேசி |
91 | கன்னத்தில் முத்தமிட்டால் (கன்னத்தில் முத்தமிட்டால்) | காபி |
92 | போறாளே பொன்னுதாயி டூயட் (கருத்தம்மா) | மோகனம் |
93 | போறாளே பொன்னுதாயி சோலோ (கருத்தம்மா) | சிவரஞ்சனி |
94 | மின்சாரப் பூவே (படையப்பா) | வசந்தா |
95 | வாடி சாத்துக்குடி (புதிய மன்னர்கள்) | குந்தலவராளி |
ராகங்களைப்பற்றி ஒன்றும் தெரியாத ஞானசூன்யம் நான் தங்களது தகவல்கள் அனைத்தும் பாராட்டுக்குறியது குறித்துக்கொண்டேன் எனது புதிய பதிவு ஐந்தாண்டு வெட்கம் காண்க...
ReplyDeleteதமிழ் மணம் 1
தமிழ் மணம் இணைய மறுக்கிறதே.... தங்களது தளத்தில் இணைந்து கொள்ளும் வழிமுறைகள் இல்லையே நண்பா....
ReplyDeleteநாரதன் அபாரம், ஏ.ஆர் ரகுமானின் பாடல்களைத் தேடியெடுத்து அவை எந்த ராகத்தில் அமைந்திருப்பவை என்பதைத் தொகுத்திருக்கும் உங்கள் செயல் போற்றுதலுக்குரியது. ஏனெனில் ஏ.ஆர்.ரகுமான் என்பவர் இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பாக அறியப்படுபவர். அவருடைய பாடல்கள் எல்லாமே மேற்கத்திய இசையும் அதன் பாணியும் அதன் தாக்கங்களும் கொண்டவை என்றே கூறப்பட்டு அதற்குரிய பிம்பமே அவர் மீது கட்டமைக்கப்பபட்டிருக்கிறது.
ReplyDeleteஅவர் கர்நாடக இசையில் தோய்ந்த பல பாடல்களை தேனினும் இனிய சுவையுடன் வழங்கியவர் என்ற செய்தி பலரிடம் போய்ச் சேர்ந்ததே இல்லை. இத்தனைக்கும் இந்த வகையில் அமைந்த தொண்ணூற்று ஐந்து சதவிகிதம் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்திருக்கின்றன............. இது மிகவும் முக்கியம்.
அந்தவகையில் இந்தத் தொகுப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அவர் பணியாற்றிய படங்கள் அத்தனையிலும் கணிசமான பாடல்களை ஹிட் வகையில் சேர்த்திருக்கிறார் என்பது விஸ்வநாதன்- ராம மூர்த்திக்குப் பிறகு ஏற்படுத்தப்பட்ட சாதனை என்றே சொல்லலாம். உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
ஒவ்வொன்றும் அருமையான பாடல்கள்
ReplyDeleteநன்றி
கடுமையாக உழைத்திருக்கிறீர்கள்.
ReplyDeleteபாராட்டுகள்.
நன்றி நன்கு தொகுத்து அளிதிருக்கீரீர்கள்
ReplyDeleteநறுமுகையே பாடல் அமைந்துள்ள ராகம் என்ன என்பதை தயவுசெய்து சொல்வீர்களா?
ReplyDeleteநாட்டை-போட்டிருக்கிறாரே!?
Delete