பல பதிவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வலைபூக்கள் வைத்து இருப்பார்கள், சிலர், ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அக்கௌன்டிலிருந்து பதிவிட்டு இருப்பார். இப்போது வேறு ஒரு ஐ.டி. பயன்படுத்துவார்கள்.
பழைய வலைப்பூவில் உள்ள பதிவுகளை அதில் உள்ள பின்னூட்டங்களுடன் புதிய வலைப்பூவிற்கு மாற்ற முடியமா?
முடியும். அதற்கு பிளாக்கரில் மிகவும் எளிய வழி இருக்கிறது.
STEP 1:
முதலில், நீங்கள் எந்த ப்ளாகில் இருந்து உங்கள் பதிவுகளை மாற்ற வேண்டுமோ அந்த ப்ளாகிற்கு சென்று login செய்யுங்கள்.
STEP 2:
இப்போது உங்கள் ப்ளாகிற்கு சென்று settingsஐ கிளிக் செய்து அதில் உள்ள Othersஐ கிளிக் செய்யுங்கள்.
STEP 3:
அடுத்து blog toolsஇல் உள்ள Export Blogஐ கிளிக்குங்கள்.
STEP 4:
படத்தில் காட்டியுள்ளது போல ஒரு dialog box தோன்றும். அதில் Download Blog என்னும் பட்டனை கிளிக் செய்யவும். உடனே, உங்கள் ப்ளாகில் உள்ள அனைத்து பதிவுகளும் .xml பார்மேட்டில் ஒரு கோப்பாக உங்கள் கணினியில் பதிவிறக்கம் ஆகிவிடும்.
STEP 5:
இப்போது, அந்த ப்ளாகிலிருந்து வெளியேறி, உங்களது புது ப்ளாகில் (அல்லது எந்த ப்ளாகில் உங்கள் பழைய பதிவுகளைப் போட வேண்டுமோ அந்த ப்ளாகில்) உள்நுழையவும். மீண்டும் அதே settings > othersக்கு செல்லவும். இப்போது 'import blog' என்னும் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
STEP 6:
உங்கள் கணினியில் பதிவான .xml fileஐத் தேர்வு செய்யவும்.
அவ்வளவு இப்போது உங்கள் ப்ளாகை பார்க்கவும். எல்லா பதிவுகளும், நீங்கள் முன்பு போட்டிருந்த அதே தேதியில் (நீங்கள் அந்த பதிவை 2012 நவம்பரில் போட்டு இருந்தால், இப்போதும் அதே நவம்பர் 2012 என்றே காட்டும்.. கவலை வேண்டாம்.)
இன்னொரு சிறப்பு என்னவென்றால், உங்கள் பதிவிருக்கு கொடுக்கப்பட்ட பின்னூட்டங்களும் அப்படியே இருக்கும். ஆனால் பார்வைகள் 0 என்று தான் இருக்கும்.
எப்படியும் பின்னூட்டங்கள் பதிவுடன் உங்களுக்கு கிடைக்கும்.
மிகவும் பயனுள்ள பதிவு
ReplyDeleteதம 1
எனக்கு மிகவும் பயனுள்ள பதிவு. முயற்சித்துப் பார்க்கிறேன். த.ம.+
ReplyDeleteusefull post thanks
ReplyDeleteஅந்த நாரதர் ஒன்றை இரண்டாக்குவார் ,இந்த நாரதன் இரண்டை ஒன்றாகக வழி 3சொல்லி இருப்பது அருமை ,இதுவும் நன்மையில் தான் முடியும் :)
ReplyDeleteத ம 3
நல்லதொரு தகவல்தான்... நன்றி!!!
ReplyDelete