Wednesday, February 11, 2015

அறியாத கதைகள் 3: பாகவதத்தில் இண்டர்ஸ்டெல்லார் (interstellar)

அறியாத கதைகள் முதல் பகுதியில் மகாபாரதத்தில் உள்ள ஒரு நிகழ்வு பற்றி எழுதி இருந்தேன். இப்போது பாகவதத்தில் இருந்து, ஒரு சின்ன பகுதியை இங்கே பதிவு செய்ய இருக்கிறேன்.



இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் வாங்கிய நூல்களில் ஸ்ரீமத் பாகவதமும் ஒன்று. அதில் ஒன்பதாவது ஸ்கந்தத்தில் ஒரு கதை வந்தது. அது படித்தவுடன் எனக்கு ஞாபகம் வந்தது இண்டர்ஸ்டெல்லார் (interstellar) திரைப்படம் தான்.
கிறிஸ்டோபர் நோலன் ஒரு ஜீனியஸ். அவரது படத்தைப் புரிந்துகொள்ளவே தனி மூளை வேண்டும். சரி. அவர் இயக்கிய இண்டர்ஸ்டெல்லார் படத்துக்கும் பாகவதத்துக்கும் என்ன சம்மந்தம்?

கால நீட்டிப்பு தான் இண்டர்ஸ்டெல்லார் படத்தின் கரு. அதாவது, படத்தில் நாயகன் செல்லும் கார்காஞ்சுவா (Gargantua) என்னும் கிரகத்தில் ஒரு மணி நேரம் நீங்கள் கழித்தால் பூமியில் எழு ஆண்டுகள் போய்விடும். ( சிறப்பு சார்பியல் கொள்கையில் ஐன்ஸ்டீன் சொன்னது.. இந்த கால நீட்டிப்பு).

இதே கால நீட்டிப்பை பாகவதத்தில் உள்ள ஒரு கதையிலும் கண்டேன். அந்த கதை இதோ:

ரேவதன் என்னும் அரசன் கடல் உள்ளே துவாரவதீ என்னும் நகரை நிர்மாணித்து ஆண்டு வந்தான். அவனுக்கு நூறு பிள்ளைகள். மூத்தவன் ககுத்மி.

ககுத்மியின் மகள் ரேவதி. பேரழகியாம். அவளுக்கு ஏற்ற மணாளன் இந்த பூவுலகில் இல்லை என்று எண்ணி, நேராக சத்யலோகம் சென்று பிரம்மரிடம் கேட்டுவிட முடிவு செய்தான்.

ககுத்மி போன்ற ஆன்றோர்களால் சத்யலோகம் செல்ல முடியுமாம். (ஆனால் எப்படி போனார் என்று எல்லாம் குறிப்பிடப் படவில்லை) 

தன் மகளுடன் ககுத்மி பிரம்மலோகம் சென்றான். அங்கே இசை-நாட்டியக் கச்சேரி நடந்து கொண்டு இருந்ததால் பிரம்ம தேவரை உடனே சந்திக்க முடியவில்லை. கொஞ்ச நேரம் போன பிறகு பிரம்மாவைக் கண்டு வணங்கி அவரிடம் தன கோரிக்கையை வைத்தார் ககுத்மி. 

"பிரம்ம தேவா! என் மகள் ரேவதிக்கு இணையான மணாளன் யார் இந்த பூலோகத்தில் இருக்கிறார்?" 

பிரம்மா சிரித்துக்கொண்டே சொன்னார்..

"ககுத்மி! நீ பூலோகத்தை விட்டு கிமபும்போது இருந்த அனைவரும் காலத்தால் கவரப்பட்டுவிட்டனர். அவர்களது மகன்கள், பேரப்பிள்ளைகள், என் அவர்களது வம்சமே இப்போது இல்லை. 

நீ இங்கே வந்து சில காலம் தான் ஆனது. அனால் பூமியில் 27 சதுர்யுகங்கள் முடிந்து இருக்கும். "

27 சதுர்யுகங்கள் என்றால் 27 x 4 = 108 யுகங்கள். 

கலி யுகம்: 432000 ஆண்டுகள்.
த்வாபர யுகம்: 2 x 432000 ஆண்டுகள்.
திரேதா யுகம்: 3 x 432000 ஆண்டுகள்.
கிருத யுகம்: 4 * 432000 ஆண்டுகள்.

இந்த நான்கும் சேர்ந்தது தான் ஒரு சதுர்யுகம். எனவே ஒரு சதுர்யுகத்தில் 10 x 432000 = 4320000 ஆண்டுகள் இருக்கும்.

108 சதுர்யுகங்கள் என்றால் 108 x 4320000 = 46,65,60,000 ஆண்டுகள்.
அதாவது 46 கோடியே 65 லட்சத்தி 60 ஆயிரம் ஆண்டுகள்.

எனவே ககுத்மி பிரம்மலோகம் வந்தநேரத்தில்  பூமியில் 466560000 ஆண்டுகள் முடிந்துவிட்டது. இப்போது எல்லாம் அங்கே மாறிப்போய் இருக்க வேண்டும்.

பிரம்ம மேலும் சொன்னார், "இப்போது பூமியில் த்வாபர யுகம் நடக்கிறது. அங்கே உள்ள பலராமன், பகவானின் அம்சம். அவரே உன் மகளுக்கு ஏற்ற ஜோடி."

பூமிக்கு திரும்பிய ககுத்மி அங்கே தன வம்சமே இல்லாமல்போனது தெரிய வந்தது. பலராமருக்கு தன மகள் ரேவதியை கல்யாணம் செய்துவிட்டு வனவாசம் சென்றார்.

No comments:

Post a Comment