இரண்டு பாடல்களையோ பாடகர்களையோ, இசையமைப்பாளர்களையோ ஒப்பீடு செய்து இவரைவிட அவர் சிறந்தவர் என்று சொல்ல முடியுமா?
ஆனானப்பட்ட மஹாகவி பாரதியே எத்தனையோ மொழிகள் அறிந்திருந்தும், தமிழ் மொழி போல் இனிய மொழி வேறு எதுவும் இல்லை என்று தான் சொன்னார். தமில்மொழியைவிட சிறந்த மொழி வேறு எதுவும் இல்லை என்று சொல்லவில்லை.
இசையும் மொழி போல தானே. இந்த பாடலைவிட அந்த பாடல் சிறந்தது என்று சொல்ல முடியுமா?
நியாயமாகச் சொன்னால், முடியாது தான்.. எல்லாமே ஏதோ ஸ்வரங்களில் கலவை என்றுதான் சொல்ல வேண்டும். அதனால் தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாடல் பிடிக்கிறது. எனவே, இந்த பதிவில் நான் பட்டியலிட்டு உள்ள பாடல்கள், என் மனதில் முதல் பத்து இடங்கள் பெற்றவையே. மற்றவர்களின் கருத்து மாறுபடலாம்.
10. ஐலா ஐலா - ஐ
வெஸ்டர்ன் கிளாசிகல் வகைப் பாடல்! ரஹ்மானின் புது முயற்சியாகத் தெரிந்தது! கொஞ்சம் சுத்த தன்யாசி சாயல்! நடாலி டி லூசியோ, ஆதித்யா ராவ் அற்புதமாக பாடி இருக்கின்றனர்.
9. நைனா நீர் பஹாயே - water
ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட படம். ஆங்கிலம், ஹிந்தி ஆகிய இரண்டு மொழியில் எடுக்கப்பட்ட படம். இந்தியாவில் தடை செய்யப்பட்ட படம். இப்படத்தில் 'பட்டியார்' (bhatiyar) என்னும் ஒரு ஹிந்துஸ்தானி ராகத்தில் இயற்றப்பட்ட பாடல்! ரஹ்மான் தனக்கு பிடித்த ராகம் என்று ஒரு நேர்காணலில் சொல்லி இருந்தார்.
8. வெண்ணிலவே வெண்ணிலவே - மின்சாரக் கனவு!
ரஹ்மான் இசைக்காக இரண்டாவது தேசிய விருது பெற்ற திரைப்படம் மின்சாரக் கனவு. ஹரிஹரன் பாடிய பாடல்களில் all time favorite பலருக்கு இந்த பாடல் தான்.
7. அழகு நிலவே - பவித்ரா
அஜித் நடித்த ஆரம்ப கால படங்களில் ஒன்றான பவித்ரா என்னும் படத்தில் உள்ள ரஹ்மானின் மாஸ்டர்பீஸ் அழகு நிலவே. பாடல் அதிகம் பிரபலம் ஆகவில்லை என்றாலும், சூப்பர் சிங்கர் வந்த பிறகு ஓரளவு அறியப்பட்டு இருக்கிறது!
6. அஞ்சலி அஞ்சலி - டூயட்
மூன்று சரணங்கள் கொண்ட பாடல். டூயட் படத்திற்கே கத்ரி கோபால்நாத்தின் சாக்ஸ் மிகப்பெரிய பலம். ரஹ்மான் இசை அமைத்த ஹை பிட்ச் பாடல்களில் இதுவும் ஒன்று. வைரமுத்துவின் எழுத்தும் பாட்டிற்கு வலு சேர்க்கிறது. எக்ஸ்ட்ராட்நரி feel தரும் பாடல்!
5. பாம்பே தீம் - பம்பாய்
இந்த பாடல் அனுராதா ஸ்ரீராம் குரலில் உள்ள பாடல். புல்லாங்குழல் வர்ஷனும் ஒன்று இருகின்றது. 'அமைதி'யை வலியுறுத்த இதைவிட சிறந்த இசையை யார் தர முடியும்?

4. Desh ki mitti - Bose the forgotten hero!
ரஹ்மானின் ஹிந்தி பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று! சோனு நிகாம் பாடி இருக்கிறார். நம்ம ஊரு அனுராதா ஸ்ரீராம் ஒரு ஆலாப் பாடி இருக்கிறார். தேசபக்தி பாடல்கள் என்றாலே ரஹ்மான் வெளுத்து வாங்குவார். அவற்றுள் சிறந்தது இப்பாடல் என்று தாறாளமாகச் சொல்லலாம்!
3. மலர்களே மலர்களே - லவ் பர்ட்ஸ்
ரஹ்மான் பாடல்கள் எல்லாமே ஒரு எக்ஸ்பரிமென்ட் தான் என்று சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட பாடல்களில் மிகவும் முக்கியமான பாடல் என்றால் மலர்களே மலர்களே. ஹரிஹரன் சித்ரா இணைந்து பாடிய பாடல். ஆர்கேஸ்ட்ரேஷனில் ரஹ்மான் அள்ளிய பாடல் இது.
2. குறுக்கு சிறுத்தவளே - முதல்வன்
இந்த பாடலை முதல் இடத்தில் வைத்தால்கூட தப்பில்லை. வாஸந்தி என்ற ஒரு ராகத்தை இதைவிட அழகாய் கொண்டாட முடியாது. இந்த ராகத்தின் சிறப்பே 'த' ஸ்வரம் தான். இதை எவ்வளவு இன்னோவடிவ்வாக பயன்படுத்துகிறோம் என்பது தான் முக்கியம். ரஹ்மான் அதை செய்த விதத்தை வைத்து சொல்கிறேன். வாசந்தியில் இந்த பாடலைவிட அழகாக யாராலும் என் ரஹ்மானாலும்கூட இன்னொரு பாட்டை இயற்ற முடியாது. இந்த பாடலின் இன்னொரு வெர்ஷன் ஸ்வர்ணலதா பாடியது - உளுந்து விதைக்கையிலே இன்னும் அழகு!
1. கலைமானே - தாளம் (Nahin Saamne - Taal in Hindi)
ஹிந்தி படமான தால் என்னும் படத்தில் உள்ள நஹி சாம்னே என்ற பாடல் தான் என் பட்டியலில் முதல் இடம். இந்த படம் 'தாளம்' என்று தமிழில் டப் செய்யப்பட்டது.
இரண்டு மொழிகளிலும் ஹரிஹரன் தான் பாடி இருகிறார். இந்த பாடல் தரும் feel வேற லெவல் என்று தான் சொல்ல வேண்டும். முதல் முறை கேட்கும்போது இப்படியும் ஒரு பாடலை கம்போஸ் செய்ய முடியுமா என்றே தோன்றியது!
இந்த பாடல் சங்கராபரணம் என்னும் ராகத்தில் தொடங்கும். சரணம் கல்யாணில் இருக்கின்றது. கடைசி இரண்டு வரியில் மட்டும் கோசலம் என்னும் ராகத்திற்கு செல்கிறது. 'சுந்தரி - கண்ணால் ஒரு சேதி' என்ற பாடலும் 'கல்யாணி - கோசலம்' கலவை தான்.
இன்னும் சில நல்ல பாடல்களை இந்த பட்டியலில் சேர்க்காமல் விட்டுவிட்டேனோ என்று தோன்றுகிறது. இருந்தாலும், பல முறை சிந்தித்ததில் இவையே எனக்கு பெஸ்ட் ஆகப் படுகிறது.
இதில் ஹரிஹரன் பாடிய பாடல்கள் அதிகம் இருப்பதை கவனித்தேன்.
இரண்டு பாடல்களைத் தவிர மற்ற பாடல்கள் எல்லாம் தொன்னூறுகளில் வந்த பாடல்கள். 2010க்குப் பிரவு வந்த பாடல்களில் ஒன்று மட்டுமே உள்ளது.
மாற்று கருத்துகள் உள்ளவர்கள் தாராளமாக தெரிவிக்கலாம். கருத்துகளுக்கேற்ப பட்டியலை மாற்றி அமைக்கலாம்!
No comments:
Post a Comment