இந்திய சினிமாவில் கர்நாடக இசைக்கு ஒரு பெரும் இடம் உள்ளதை மறுக்க முடியாது. நாம் மேற்கத்திய பாணியில் அமைந்துள்ளது என்று எண்ணிக்கொண்டிருக்கும் பாடல்களில் பல கர்நாடக சங்கீத ராகங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. இன்றும்கூட பல பாப்\டல்கள் ராகங்களின் அடிப்படியில் இசையமைக்கப்படுகிறது.
இந்த ஆண்டு (2013) முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், இந்த ஆண்டில் ராகங்களின் அடிப்படையில் இசையமைக்கபட்ட பாடல்களின் பட்டியலை தயார் செய்து இருக்கிறேன்.
சிவரஞ்சனி ( sivaranjani ):
இந்த ஆண்டில் மூன்று பாடல்கள் சிவரஞ்சனியில் இசையமைக்கப்பட்டுள்ளது.
1. Amma Wake Me Up - வத்திகுச்சி படம்.
கிப்ரான் இசையமைத்த இரண்டாவது படம் இது. ஏற்கனவே முதல் படத்தில் (வாகை சூடவா) ஸரசாங்கி ராகத்தில் போறாளே போறாளே என்று ஒரு பாடலைக் கொடுத்தவர். இந்த படத்தில் அம்மா வேக் மீ அப் என்னும் பாடலை சிவரஞ்சனியில் இசை அமைத்து இருக்கிறார். இந்த பாடலுக்கு "கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்' பாடல் தான் இன்ச்பிரேஷன் என்று நிச்சயமாக சொல்லலாம். ரஹ்மான் இசையமைத்த அந்த பாடலும் சிவரஞ்சனி தான். அத்தோடு அந்த பாடலில் உள்ளது போன்றே 'கிளாக்' சத்தத்தையும் பயன்படுத்தி இருக்கிறார் கிப்ரான்.
2. பல்லு போன ராசா - கல்யாண சமையல் சாதம்
அரோரா என்னும் புதுமுக இசையமைப்பாளர் கம்போஸ் செய்த பாடல். கிண்டல் செய்வது போல அமைந்த இப்பாடலுக்கு சிவரஞ்சனி நல்ல சாய்ஸ். முதல் படத்திலே இவர் கொடுத்த எல்லா பாடல்களும் கிளாஸ் ரகம்.
3. எங்க போறே மகனே - மதயானைக் கூட்டம்
புதுமுக இசையமைப்பாளர் ரகுநாதன் இசை அமைத்த பாடல். படத்தை தயாரித்தவர் ஜி .வி. பிரகாஷ். இதுவும் சிவரஞ்சனி தான். மேலே உள்ள இரண்டு பாடல்களும் ஒரே மாதிரியான feel தரும். இந்த பாடல் அந்த இரண்டு பாடல்களைவிட வவித்யாசமானது.
பஹுதாரி ( Bahudhari )
ஆஹா காதல் - மூன்று பேர் மூன்று காதல்
யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்த இப்பாடல் ஹிட் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் நிச்சயம் இது ஒரு அருமையான மெலடி...
த்விஜாவந்தி ( Dwijavanthi )
உன்னை காணாது நான் - விஸ்வரூபம்
இந்த பாடலை பிடிக்கவில்லை என்று மாட்டார்கள். சிலர் இந்த பாடலை காபி ராகம் என்று சொல்லுவார்கள். ( கமலஹாசனும் ஒருமுறை இப்பாடலை 'ரகுபதி ராகவ ராஜா ராம்' பாடலின் ராகத்தில் இசையமைத்துத் தருமாறு கேட்டுக்கொண்டதாக சொன்னார். ரகுபதி ராகவ பாடல் காபி ராகம் ஆச்சே) அனால் நான் அறிந்த வரையில் இது த்விஜாவந்தி தான். தமிழில் இந்த ராகத்தை ரஹ்மானும் வித்யாசாகரும் தான் இதுவரை பயன்படுத்தி இருக்கின்றனர். இவர்களுக்குப் பின் ஷங்கர் - ஈஷான் - லாய் இப்படத்தில் பயன்படுத்தி உள்ளனர்.
அமிர்தவர்ஷிணி ( Amritavarshini )
மெல்ல சிரித்தாள் - கல்யாண சமையல் சாதம்
இந்த ராகத்தை இசைத்தல் மழை பெய்யும் என்ற நம்பிக்கை உண்டு. சினிமாவில் இந்த ராகம் அதிகம் பயன்படுத்தப்பட்டதில்லை. ராகவேந்திரா படத்தில் மழைக்கொரு தேவனே என்ற பாடலும் அக்னி நட்சத்திரம் படத்தில் தூங்காத விழிகள் ரெண்டு பாடலும் தான் எனக்கு தெரிந்து அம்ரிதவர்ஷினியில் உள்ள பாடல்கள். அதற்குப்பிறகு ஆரோரா இசையமைத்த கல்யாண சமையல் சாதம் படத்தில் உள்ள மெல்ல சிரித்தாள் பாடலின் பல்லவி அமிர்தவர்ஷினியில் அமைந்து உள்ளது. இந்த பாடலில் 'தூங்காத விழிகள் ரெண்டு' பாடலின் சாயல்கள் லேசாக தெரியும். இப்பாடலின் சரணம் மேஜர் ஸ்கேலில் (சங்கராபரணம் ராகம்) அமைந்து உள்ளது.
முகாரி ( Mukhari )
கண்ணுக்குள் பொத்திவைப்பேன் - திருமணம் என்னும் நிக்காஹ்
சோகத்தை சொல்லும் முகாரி ராகத்தைக் கொண்டு ஜாலியான பாடல்களைத் தர ஜிப்ரான் போன்ற சிலரால் மட்டும் தான் முடியும் . இப்பாடலின் பல்லவி முகாரி ராகத்தில் இசை அமைக்கப்பட்டுள்ளது. முதலில் இப்பாடல் பைரவி ராகம் என்று நினைத்துவிட்டேன். பிறகு இப்பாடலைப் பாடிய சாருலதா மணி தான் இது முகாரி என்று தெளிவு படுத்தினார்.
ஹமீர்-கல்யாணி ( Hamir Kalyani )
கண்ணுக்குள் பொத்திவைப்பேன் - திருமணம் என்னும் நிக்காஹ்
இப்பாடலின் பல்லவி முகாரி ராகத்தில் உள்ளது. சரணம் ஹமிர் கல்யாணியில் அமைந்து உள்ளது. மிகவும் அழகான ராகம்.
மிஸ்ர கரா ( Mishra gara )
கண்ண கண்ண உருட்டி - வத்திகுச்சி
இப்பாடல் மிஸ்ரா கரா ராகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. அவ்வளவு பிரபலாமான ராகம் இல்லை என்றாலும் இந்த பாடல் ஓரளவுக்கு பேசப்பட்டது.
ஜிங்குனமணி - ஜில்லா
இமான் இதுபோன்ற ஒரு வித்யாசமான பாடலைத் தருவார் என்று நினைத்துகூட பார்க்கவில்லை. சலநாட்டையே ஒரு வித்யாசமான ராகம். இந்த ராகத்தில் அமைந்த பாடல்கள் எல்லாமே நான் அறிந்தவரையில் ஹிட்.
Aao Balma - ஏ.ஆர்.ரஹ்மான்
எம்.டி.வி.யில் கோக் ஸ்டுடியோ நடத்திய நிகழ்ச்சியில் பல புகழ்பெற்ற இசைக்கலைஞர்களுடன் இனைந்து ரஹ்மான் ஆக்கிய பாடல் தான் ஆவோ பல்மா. கர்நாடக இசையை கிட்டார் பியானோ போன்ற மேற்கத்திய இசைக் கருவிகளைக் கொண்டு கொடுத்த ஒரு அருமையான இசைக் கோவை தான் ஆவோ பல்மா.
மற்ற பாடல்கள்
நான் அறிந்து வேறு எந்த பாடலும் கல்யாணில் இல்லை.
குட்டிபுலி யில் காத்து காது வீசுது பாடலில் கொஞ்சம் கல்யாணி சாயல் உள்ளது. ஹம்சத்வனி சாயல் கூட.
திருமணம் என்னும் நிக்கஹ்வில் உள்ள சில்லென்ற சில்லென்ற பாடலிலும் ஒரு சில இடங்களில் கல்யாணி சாயல் உள்ளது.
நய்யாண்டி படத்தில் முன்னாடி போற புள்ள பாட்டின் சரணத்தின் முதல் இரண்டு வரிகள் கல்யாணி ராகம்.
மேற்கூறிய மூன்று பாடல்களை இசை அமைத்தவரும் ஜிப்ரான் தான்.
.
இப்பதிவை இத்தோடு நான் முடித்துக் கொள்கிறேன். இப்பதிவில் ஏதேனும் ராகத்தை நான் தப்பாகவோ மாற்றியோ எழுதி இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். வேறு ஏதேனும் பாடல்கள் ராகத்தின் அடிப்படையில் இயற்றப்பட்டு இருந்தாலும் தெரிவிக்கவும்.
நன்றி.
சலநாட்டை ( Chalanattai )
ஜிங்குனமணி - ஜில்லா
இமான் இதுபோன்ற ஒரு வித்யாசமான பாடலைத் தருவார் என்று நினைத்துகூட பார்க்கவில்லை. சலநாட்டையே ஒரு வித்யாசமான ராகம். இந்த ராகத்தில் அமைந்த பாடல்கள் எல்லாமே நான் அறிந்தவரையில் ஹிட்.
கல்யாணி ( Kalyani )