Sunday, January 25, 2015

ஹாரிஸ் ஜெயராஜ் கற்ற கர்நாடக இசை


என்னது ஹாரிஸ் கர்நாடக சங்கீதம் கற்றாரா என்று என்னைக் கேட்காதீர்கள்.. எனக்கு தெரியாது. ஆனால் அவர் கம்போஸ் செய்த 41 தமிழ் படங்களில் உள்ள சில பாடல்கள் கர்நாடக ராகங்களின் அடிப்படையில் அமைந்தவை. அவற்றைப் பற்றி சில தகவல்கள் கீழே.

1. அய்யங்காரு வீட்டு அழகே (அந்நியன்) :

இயக்குனர் ஷங்கருக்கு கர்நாடக இசை சற்றே தெரியும் என்று கேள்விபட்டு இருக்கிறேன். T.M.S. குரலில் பாடுவாராம். அவர் கேட்டுக்கொண்டதால் இந்த பாடலை "நாட்டை"  ராகத்தில் கம்போஸ் செய்து இருக்க வேண்டும். படத்தில் இந்த பாடல் வரும் சிசுவேஷன் அப்படி.. திருவையாறில் தியாகராஜரின் சமாதி முன்னே பல இசைக்கலைஞர்களுடன் விக்ரம், சதா அவர்களது குடும்பத்தினர் பஞ்சரத்ன கீர்த்தனையின் முதல் கீர்த்தனையான நாட்டை ராகத்தில் "ஜகதானந்த காரகா" பாடும்போது, விக்ரம் மைண்டில் ஓடுகிறது இந்த பாட்டு. ஷங்கர் தான் அநேகமாக ஹாரிஸை அதே ராகத்தில் ஒரு பாட்டு இசை அமைத்துத் தர சொல்லி கேட்டு இருக்க வேண்டும்.



2. நெஞ்சில் நெஞ்சில் ஏதோ ஏதோ (எங்கேயும் காதல்)

நடபாரவி என்னும் ராகத்தில் இசை அமைத்து போர் அடித்து போன ஹாரிஸ்க்கு கொஞ்சம் வித்யாசமாக எதாவது ட்ரை செய்யனும்னு தோணிச்சு போல. நடபைரவியின் சாதாரண காந்தாரத்தைத் தூக்கி போட்டு அந்தர காந்தாரதிக்கு ஒரு வாய்ப்பு  கொடுத்து சாருகேசி ராகத்தில் இசை அமைத்த பாடல் தான் நெஞ்சில் நெஞ்சில் ஏதோ ஏதோ. இதே ராகத்தில் உள்ள 'உதயா உதயா', 'ஏதோ ஏதோ வந்து எனக்குள்ளே  நுழைந்து' 'ஆடல் கலையே தேவன் தந்தது' போன்ற பாடல்களும் ஒப்பிடாமல் கேட்டு பார்த்தல், இதுவும் ஒரு அட்டகாசமான சாருகேசி தான்.


3. நல்ல நண்பன் வேண்டும் என்று (நண்பன்)

ஷங்கருடன் மீண்டும் கூட்டு சேர்ந்து நண்பன் படத்தில் வேலை செய்தார்கள். இப்படத்தில் சோகத்திற்கு என்றே பேர் போன சக்கரவாகம் என்னும் ராகத்தில் நல்ல நண்பன் வேண்டும் என்று அந்த மரணமும் நினைகின்றதா என்ற பாடலை இசையமைத்து இருக்கிறார் நம் ஜெயராஜ். கையறு நிலையை உணரவைக்கும் ஒரு ஆச்சர்யமான ராகம் சக்ரவாகம். 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' என்னும் பாடல் இந்த ராகத்தில் MSVயால் இயற்றப்பட்ட கிளாசிக். அதற்குப் பின் வந்த அனைத்து சக்ரவாகப் பாடல்களிலும், உள்ளத்தில் நல்ல உள்ளம் சாயல் எங்காவது தென்பட்டு, 'ஏற்கனவே கேட்ட மாறி இருக்கே' என்று தோன்ற செய்துவிடும். பொதுவாக எந்த ஹாரிஸ் பாடலைக் கேட்டாலும் அப்படி தான் தோன்றும். அனால் நண்பன் படப் பாடலில் உள்ளத்தில் நல்ல உள்ளம் இம்பாக்ட் தெரியாமல் கம்போஸ் செய்த ஹாரிஸ் ஜெயராஜை நிச்சயம் பாராட்டலாம்.


4.  தீயே தீயே (மாற்றான்)

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த வித்யாசமான பாடல்களுள் இப்பாடலுக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு. கிட்டத்தட்ட 'சிந்து பைரவி' என்னும் ராகத்தில் தான் இப்பாடல் கம்போஸ் செய்யப்பட்டு உள்ளது. ரஹ்மான், ராஜா, தேவா என்று எல்லா இசையமைப்பாளர்கள் கலக்கிய ஒரு ராகம் சிந்து பைரவி. இதில் தனக்கென்று ஒரு பாடலை ஹாரிஸ் இசை அமைத்து அந்த லிஸ்டில் சேர்ந்துவிட்டார்.


மற்ற பாடல்கள்:

குமாரி (அந்நியன்): இந்த பாடலில் சாமா என்னும் ராகத்தின் சாயல்கள் உள்ளது.
லேசா லேசா (லேசா லேசா): இப்பாடலில் பிலஹரி, கம்போஜி ராகங்கள் தென்படுகின்றது.

நான் கேட்ட வரையில் இந்த பாடல்கள் தான் கர்நாடக ராகங்களில் அமைக்கப் பட்டவை. இன்னும் பல பாடல்கள் மேஜர் ஸ்கேலிலும் (சங்கராபரணம்) மீனார் ஸ்கேலிலும் (நடபைரவி) ஹாரிஸ் இசை அமைத்து இருக்கிறார். வேறு ஏதேனும் இருந்தால் பின்நூததில் தெரிவியுகள். தப்பாக சொல்லியிருந்தாலும் சுட்டிக்காடுங்கள்.

3 comments:

  1. ஹாரிஸ் கற்றிருக்கிறாரா என்பது தெரியாது. ஆனால் நீங்கள் கற்றிருப்பதாக தெரிகிறது நல்ல இசைத் தகவல்கள்

    ReplyDelete
  2. அவர் கற்றரியா விட்டால் மற்ற இசை அமைப்பாலர்கள் யிடம் அவருக்கு மரியாதை இருக்கது அந்த வகையில் அவர் கற்றவரே (8வயதில் கர்நாடக இசை கற்றேன் என்று அவர் ஒரு பேட்டி யில் கூறி இருக்கிறார்)

    ReplyDelete