Friday, May 27, 2016

Rasali Lyrics Tamil And English

RAASALI  SONG LYRICS:


MOVIE: ACHAM ENBADHU MADAMAIYADA
Music : A.R.Rahman
Singers: Sathyaprakash, Shasha Tripathi
Lyrics: Thamarai

PALLAVI
MALE
parakkum raasaliye raasaliye nillu
ingu nee vegama naan vegama sollu
gadigaram poi sollum endre nan kanden
kizhakkellam merkaagida kandene

FEMALE
paravai pol aginen pol aginen indru
siragum en kaigalum en kaigalum ondru

MALE
rasali pandhayama pandhayama

nee mundhiya nan mundhiya parpom parpom
mudhalil yar solvadhu yar solvadhu anbai
mudhalil yar eivadhu yar eivadhu ambai
mounam pesamale pesamale sella
vaavi neeril kamalam
pol aadi mella
kanavugal varuthe kannin vazhiye
en thol meedhu nee
naan kulirkaaygindra thee!

CHARANAM
MALE

Ettu thisai muttum enai pagalinil
Kottum pani mattum thunai iravinil
nettum oru pattu kural manadhinil madiveno!!

Munnil oru kaatrin kali mugathinil
Pinnil siru pachai kili mudhuginil
Vaazhvil oru payanam ithu mudinthida viduveno!!

Ettu thisai muttum enai pagalinil
Kottum pani mattum thunai iravinil
nettum oru pattu kural manadhinil madiveno!!

Munnil oru kaatrin kali mugathinil
Pinnil siru pachai kili mudhuginil
Vaazhvil oru payanam ithu mudinthida viduveno!!

rasali pandhayama pandhayama

mudhalil yar solvadhu yar solvadhu anbai
mudhalil yar eivadhu yar eivadhu ambai

FEMALE (lyrics from a carnatic varnam)

ninnu kori!
ninnu kori!
ninnu kori unnaru raa!
ninnu kori unnaru raa!
ninnu kori! kori!

CHARANAM
FEMALE

Veyil mazhai vetkumpadi nanaivadhai
Vinmeengalum veenai yenai thodarvadhai
Oorukkoru kaatrin manam kamazhvathai maravene!

Munnum ithu pole pudhu anubavam
Kanden ena sollumpadi ninaivillai
Innum ethir kaalathilum vazhiyillai maravene!

rasali pandhayama pandhayama

MALE

mudhalil yar solvadhu yar solvadhu anbai!
mudhalil yar eivadhu yar eivadhu ambai!
mounam pesamale pesamale sella
vaavi neeril kamalam
pol aadi mella
kanavugal varuthe kannin vazhiye
en thol meedhu nee
naan kulirkaaygindra thee!
en thol meedhu nee
naan kulirkaaygindra thee!
kulirkaaygindra thee!
kulirkaaygindra thee!

தமிழில் பாடல் வரிகள்:
பல்லவி:
ஆண்:
பறக்கும் ராசாளியே ராசாளியே நில்லு!
இங்கு நீ வேகமா நான் வேகமா சொல்லு!
கடிகாரம் பொய் சொல்லும் என்றே நான் கண்டேன்!
கிழக்கெல்லாம் மேற்காகிட கண்டேனே!

பெண்:
பறவை போல் ஆகினேன் போல் ஆகினேன் இன்று!
சிறகும் என் கைகளும் என் கைகளும் ஒன்று!

ஆண்:
ராசாளி பந்தயமா பந்தயமா!
நீ முந்தியா நான் முந்தியா பார்போம்! பார்போம்!
முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை?
முதலில் யார் எய்வது யார் எய்வது அம்பை?
மௌனம் பேசாமலே பேசாமலே செல்ல
வாவி நீரில் கமலம்
போல் ஆடி மெல்ல
கனவுகள் வருதே கண்ணின் வழியே
என் தோள்மீது நீ!
நான் குளிர்காய்கின்ற தீ!

சரணம்:
ஆண்:

எட்டு திசை முட்டும் எனை பகலினில்
கொட்டும் பனி மட்டும் துணை இரவினில்
நெட்டும் ஒரு பட்டுக் குரல் மனதினில் மடிவேனோ!

முன்னில் ஒரு காதல் கழிமுகத்தினில்
பின்னில் சிறு பச்சைக்கிளி முதுகினில்
வாழ்வில் ஒரு பயணம் இது முடிந்திட விடுவேனோ!!

எட்டு திசை முட்டும் எனை பகலினில்
கொட்டும் பனி மட்டும் துணை இரவினில்
நெட்டும் ஒரு பட்டுக் குரல் மனதினில் மடிவேனோ!

முன்னில் ஒரு காதல் கழிமுகத்தினில்
பின்னில் சிறு பச்சைக்கிளி முதுகினில்
வாழ்வில் ஒரு பயணம் இது முடிந்திட விடுவேனோ!!

ராசாளி பந்தயமா பந்தயமா!
முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை?
முதலில் யார் எய்வது யார் எய்வது அம்பை?

பெண்:
நின்னு கோரி!
நின்னு கோரி!
நின்னு கோரி உன்னாரு ரா!
நின்னு கோரி உன்னாரு ரா!
நின்னு கோரி கோரி!

சரணம்:
பெண்:
வெயில் மழை வேட்கும்படி நனைவதை
விண்மீன்கள் வீணாய் எனை தொடர்வதை
ஊருக்கொரு காற்றின் மனம்கமழ்வதை மறவேனே!

முன்னும் இது போலே புது அனுபவம்
கண்டேன் என சொல்லும்படி நினைவில்லை
இன்னும் எதிர்காலத்திலும் வழியில்லை மறவேனே!

ஆண்:
ராசாளி பந்தயமா பந்தயமா!
முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை?
முதலில் யார் எய்வது யார் எய்வது அம்பை?
மௌனம் பேசாமலே பேசாமலே செல்ல
வாவி நீரில் கமலம்
போல் ஆடி மெல்ல
கனவுகள் வருதே கண்ணின் வழியே
என் தோள்மீது நீ!
நான் குளிர்காய்கின்ற தீ!
நான் குளிர்காய்கின்ற தீ!
நான் குளிர்காய்கின்ற தீ!

Saturday, July 18, 2015

அறியாத கதைகள் 4 - எல்லாம் நன்மைக்கே! - புது கதை!



இந்த கதையைப் பலர் அறிந்திருக்கக் கூடும். இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படிக்கும்போது ஒரு செமினாரில் பங்குபெற்றிருந்தேன். அதில் ஒருவர் சொன்ன கதை.

லண்டன் மாநகரில் உள்ள ஒரு தேவாலயத்தில் கட்டியர் (verger) ஒருவர் இருந்தார். ஆலயத்தில் மணி அடிப்பது, திருமணம், இறுதி யாத்திரை போன்ற சடங்குகளுக்கும், மற்ற பல வேலைகளையும் தேவாலயத்தில் செய்வதே அவர் வேலை. பரம்பரை பரம்பரையாக அந்த தொழிலை அவரது முன்னோர்கள் செய்து வந்தனர். இப்போது நம்ம ஆளு செய்து வருகிறார்.

அவருக்கு எழுத படிக்க தெரியாது. ஆனால் சர்ச்சில் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக குறை ஏதுமின்றி செய்து வந்தார்.

ஒரு நாள் அந்த தேவாலயத்தின் அருட்தந்தை (father) மாற்றப்பட்டு புதியதாக ஒருவர் நியமிக்கப்பட்டார். அவர் மக்களுக்கு சேவை செய்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். முதலில் லண்டன் மக்கள் அனைவருக்கும் எழுத்தறிவை போதிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

அதன் முதல் கட்டமாக தேவாலயத்தில் வேலை பார்பவர்களுக்கு கட்டாயம் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்.

நம் கட்டியர் இந்த செய்தியைக் கேட்டுத் தன் வேலைக்கு ஆப்பு வைத்து விடுவார்களோ என்று அச்சம் கொண்டார். நேராக அருத்தந்தையைப் பார்த்து கேட்டுவிட தீர்மானித்தார்.

'அய்யா! பரம்பரை பரம்பரையாக என் வம்சம் தான் இந்த ஆலயத்தில் கட்டியர் பணியை மேற்கொண்டு வருகிறோம். ஆனால் எழுத படிக்க எனக்குத் தெரியாது. நான் என்ன செய்வது' என்று கேட்டார் கட்டியர்.

'உன் பரம்பரையே இந்த தேவாலயதிற்கு உழைத்து இருப்பதால் உனக்கு ஒரு சலுகை மட்டும் தருகிறேன். மூன்று மாதம் உனக்கு அவகாசம் தருகிறேன். அதற்குள் எழுத படிக்கக் கற்றுக்கொள். நம் ஆலயத்தில் உள்ளவர்களை உனக்கு உதவி செய்யச் சொல்கிறேன். கவலைப்படாதே!' என்று சொன்னார் அருட்தந்தை.

கட்டியருக்கு இந்த பதில் திருப்தி தரவில்லை.
'அய்யா! படிக்கும் வயதிலே, எனக்கு கல்வி சுத்தமாக வரவில்லை. என் தந்தை எனக்கு எழுத்தறிவு கொடுக்க எவ்வளவோ முயன்றும் எனக்கு கொஞ்சமும் எழுதப்படிக்கக் கற்று கொடுக்க முடியவில்லை. அப்படி இருக்க நாற்பது வயது கடந்தபிறகு இப்போது என்னால் எப்படி கற்க முடியும்?' என்று கேட்டார்.

'அப்போது எழுத்தறிவு கொண்ட ஒருவரை தான் நான் நியமிக்க வேண்டும்.. சாரி!' என்று கைவிரித்தார் அருட்தந்தை.

ஒருவித விரக்தியில், 'நான் ராஜினாமா செய்கிறேன்' என்றார் கட்டியர். எத்தனையோ ஆண்டுகளாக தான் வேலை பார்த்த தேவாலயத்தை விட்டு வெளியேறினார் அவர்.

இல்லம் செல்ல மனம் வரவில்லை. மனைவியிடம் சொல்லவேண்டுமே, வேலை போய்விட்டது என்று!

எனவே அவர் வீட்டுக்கு செல்லாமல் ஹைவே வழியே நடந்து செல்கிறார். அவருக்கு நடந்ததை நினைக்க நினைக்க ஸ்ட்ரெஸ் அதிகமானது. ஒரு சிகரெட் பிடித்தால் தேவலை என்று நினைத்தார். சிகரெட் கடையை எதிர்நோக்கி அந்த ஹைவேயில் நடந்து சென்றார்.

அதிர்ஷ்டவசமாகவோ இல்லை துரதிஷ்டவசமாகவோ அவர் கண்ணில் ஒரு சிகரெட் கடை கூட தென்படவே இல்லை.

அவருக்குள் ஒரு ஸ்பார்க் வந்தது.

'நான் என் இங்கு ஒரு சிகரெட் கடை வைக்கக் கூடாது? என்னைப்போன்று இந்த நெடுஞ்சாலையில் மற்றவரும் சிகரெட் பிடிக்க நினைக்கக் கூடும். ஆனால் ஒரு கடை கூட இங்கே இல்லை. நான் என் ஒன்றைத் தொடங்கக் கூடாது?' என்று அவருக்குத் தோன்றியது.

ஒரு புதிய தெம்போடு வீடு சென்றார். மனைவியைப் பார்த்து சொன்னார் 'எனக்கு எழுத படிக்கத் தெரியாததால் சர்ச்சில் வேலை பறிபோனது! கவலைப்படாதே நான் இனிமேல் ஒரு புது தொழில் செய்யப்போகிறேன். நெடுஞ்சாலையில் சிகரெட் கடை ஒன்றை விக்க போகிறேன்.'

மனைவிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
அந்த கட்டியர் தான் இத்தனை காலம் சேர்த்து வைத்த பணத்தை முதலாகப் போட்டு ஒரு சிகரெட் கடையை ஹைவேயில் தொடங்குகிறார். கொஞ்ச நாளிலே கல்லா கட்ட ஆரம்பித்து விட்டார்.  நல்ல லாபம் வந்தது. இன்னும் சில கடைகளைத் திறந்து வேலைக்கு ஆட்களை நியமித்தார்.

எங்கே எல்லாம் சிகரெட் கடை இல்லை என்று பார்த்து பார்த்து அங்கெல்லாம் கடைகளைத் திறந்தார். லட்சாதிபதி ஆனார் நம் கட்டியர்.. இனிமேல் முதாலாளி என்றே அழைக்கலாம்!

அவரிடம் பணம் கூடுவதை கவனித்த பங்குச்சந்தைக்காரர்கள் அவரை அணுகினர்.

'சார்! நீங்கள் உங்கள் பணத்தை பங்குச் சந்தையில் இன்வெஸ்ட் செய்யுங்கள். உங்களுக்கு இன்னும் லாபம் கிடைக்கும்.' என்றனர்.

நம் முதலாளியோ, 'பங்குச் சந்தை பற்றி எல்லாம் எனக்கு எதுவும் தெரியாதே' என்றார்.

'கவலைய விடுங்க. நாங்க இருக்கோம்' என்று வாசன் ஐ கேர் போல சொன்னார்கள் பங்குச்சந்தைக்க்காரர்கள்.

'சரி நீங்களே நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். செய்து விடலாம்' என்றார் முதலாளி.

'நாங்கள் டாகுமெண்ட்களை தயாரித்துவிட்டு வருகிறோம்' என்று சொல்லிட்டு சென்றனர் அவர்கள்.

ஒரு வாரத்தில் அனைத்து டாகுமென்ட்களையும் தயாரித்துவிட்டு வந்தனர் பங்குச்சந்தைக்காரர்கள்.

'அய்யா நீங்கள் இந்த டாகுமென்ட்டைஒருமுறை படித்துவிட்டு ஒரு கையெழுத்து இட்டால் போதும். மற்றவையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.'

முதலாளி தயங்கினார்.
'எனக்கு எழுத படிக்கத்  தெரியாதே' என்று சொன்னார்.

அதிர்ச்சி அடைந்தனர் பங்குச்சந்தைக்காரர்கள். சில நொடிகளுக்கு யாரும் எதுவும் பேசவில்லை.

பிறகு ஒருவர் கேட்டார்.
'எழுத படிக்கத் தெரியாமலே நீங்கள் இவ்வளவு பெரிய ஆள் ஆகிவிட்டீர்கள். உங்களுக்கு மட்டும் எழுத படிக்கத் தெரிந்திருந்தால்??????'

முதலாளி சிரித்துக்கொண்டே சொன்னார்!
'கோவிலில் மணி அடித்துக் கொண்டிருதிருப்பேன்! எல்லாம் நன்மைக்கே!'



அறியாத கதைகள் 1: மகாபாரதம் - கர்ணனா தர்மனா ?
அறியாத கதைகள் 2: என் ஆசிரியரை எப்படி தண்டிப்பேன்?
அறியாத கதைகள் 3: பாகவதத்தில் இண்டர்ஸ்டெல்லார் (interstellar)
அறியாத கதைகள் 4 - எல்லாம் நன்மைக்கே! - புது கதை!

ஏ.ஆர்.ரஹ்மானின் டாப் 10 பாடல்கள்

ஏ.ஆர்.ரஹ்மானின் பெஸ்ட் சாங் எது? என்று சிலர் என்னை கேட்பார்கள்..


இரண்டு பாடல்களையோ பாடகர்களையோ, இசையமைப்பாளர்களையோ ஒப்பீடு செய்து இவரைவிட அவர் சிறந்தவர் என்று சொல்ல முடியுமா?

ஆனானப்பட்ட மஹாகவி பாரதியே எத்தனையோ மொழிகள் அறிந்திருந்தும், தமிழ் மொழி போல் இனிய  மொழி வேறு எதுவும் இல்லை என்று தான் சொன்னார். தமில்மொழியைவிட சிறந்த மொழி வேறு எதுவும் இல்லை என்று சொல்லவில்லை.

இசையும் மொழி போல தானே. இந்த பாடலைவிட அந்த பாடல் சிறந்தது என்று சொல்ல முடியுமா?

நியாயமாகச் சொன்னால், முடியாது தான்.. எல்லாமே ஏதோ ஸ்வரங்களில் கலவை என்றுதான் சொல்ல வேண்டும். அதனால் தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாடல் பிடிக்கிறது. எனவே, இந்த பதிவில் நான் பட்டியலிட்டு உள்ள பாடல்கள், என் மனதில் முதல் பத்து இடங்கள் பெற்றவையே. மற்றவர்களின் கருத்து மாறுபடலாம்.

10. ஐலா ஐலா - ஐ

வெஸ்டர்ன் கிளாசிகல் வகைப் பாடல்! ரஹ்மானின் புது முயற்சியாகத் தெரிந்தது! கொஞ்சம் சுத்த தன்யாசி சாயல்! நடாலி டி லூசியோ, ஆதித்யா ராவ் அற்புதமாக பாடி இருக்கின்றனர்.



9. நைனா நீர் பஹாயே - water

ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட படம். ஆங்கிலம், ஹிந்தி ஆகிய இரண்டு மொழியில் எடுக்கப்பட்ட படம். இந்தியாவில் தடை செய்யப்பட்ட படம். இப்படத்தில் 'பட்டியார்' (bhatiyar) என்னும் ஒரு ஹிந்துஸ்தானி ராகத்தில் இயற்றப்பட்ட பாடல்!  ரஹ்மான் தனக்கு பிடித்த ராகம் என்று ஒரு நேர்காணலில் சொல்லி இருந்தார்.



8. வெண்ணிலவே வெண்ணிலவே - மின்சாரக் கனவு!

ரஹ்மான் இசைக்காக இரண்டாவது தேசிய விருது பெற்ற திரைப்படம் மின்சாரக் கனவு. ஹரிஹரன் பாடிய பாடல்களில் all time favorite பலருக்கு இந்த பாடல் தான்.


7. அழகு நிலவே - பவித்ரா

அஜித் நடித்த ஆரம்ப கால படங்களில் ஒன்றான பவித்ரா என்னும் படத்தில் உள்ள ரஹ்மானின் மாஸ்டர்பீஸ் அழகு நிலவே. பாடல் அதிகம் பிரபலம் ஆகவில்லை என்றாலும், சூப்பர் சிங்கர் வந்த பிறகு ஓரளவு அறியப்பட்டு இருக்கிறது!



6. அஞ்சலி அஞ்சலி - டூயட்

மூன்று சரணங்கள் கொண்ட பாடல். டூயட் படத்திற்கே கத்ரி கோபால்நாத்தின் சாக்ஸ் மிகப்பெரிய பலம். ரஹ்மான் இசை அமைத்த ஹை பிட்ச் பாடல்களில் இதுவும் ஒன்று. வைரமுத்துவின் எழுத்தும் பாட்டிற்கு வலு சேர்க்கிறது. எக்ஸ்ட்ராட்நரி feel தரும் பாடல்!


5. பாம்பே தீம் - பம்பாய்

இந்த பாடல் அனுராதா ஸ்ரீராம் குரலில் உள்ள பாடல். புல்லாங்குழல் வர்ஷனும் ஒன்று இருகின்றது. 'அமைதி'யை வலியுறுத்த இதைவிட சிறந்த இசையை யார் தர முடியும்?



4. Desh ki mitti - Bose the forgotten hero!

ரஹ்மானின் ஹிந்தி பாடல்களில் எனக்கு மிகவும்  பிடித்த பாடல்களில் ஒன்று! சோனு நிகாம் பாடி இருக்கிறார். நம்ம ஊரு அனுராதா ஸ்ரீராம் ஒரு  ஆலாப் பாடி இருக்கிறார். தேசபக்தி பாடல்கள் என்றாலே ரஹ்மான் வெளுத்து வாங்குவார். அவற்றுள் சிறந்தது இப்பாடல் என்று தாறாளமாகச் சொல்லலாம்!


3. மலர்களே மலர்களே - லவ் பர்ட்ஸ்

ரஹ்மான் பாடல்கள் எல்லாமே ஒரு எக்ஸ்பரிமென்ட் தான் என்று சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட பாடல்களில் மிகவும் முக்கியமான பாடல் என்றால் மலர்களே மலர்களே. ஹரிஹரன் சித்ரா இணைந்து பாடிய பாடல். ஆர்கேஸ்ட்ரேஷனில் ரஹ்மான் அள்ளிய பாடல் இது.


2. குறுக்கு சிறுத்தவளே - முதல்வன்

இந்த பாடலை முதல் இடத்தில் வைத்தால்கூட தப்பில்லை. வாஸந்தி என்ற ஒரு ராகத்தை இதைவிட அழகாய் கொண்டாட முடியாது. இந்த ராகத்தின் சிறப்பே 'த' ஸ்வரம் தான். இதை எவ்வளவு இன்னோவடிவ்வாக பயன்படுத்துகிறோம் என்பது தான் முக்கியம். ரஹ்மான் அதை செய்த விதத்தை வைத்து சொல்கிறேன். வாசந்தியில் இந்த பாடலைவிட அழகாக யாராலும் என் ரஹ்மானாலும்கூட இன்னொரு பாட்டை இயற்ற முடியாது. இந்த பாடலின் இன்னொரு வெர்ஷன் ஸ்வர்ணலதா பாடியது - உளுந்து விதைக்கையிலே இன்னும் அழகு!



1. கலைமானே - தாளம் (Nahin Saamne - Taal in Hindi)

ஹிந்தி படமான தால் என்னும் படத்தில் உள்ள நஹி சாம்னே என்ற பாடல் தான் என் பட்டியலில் முதல் இடம். இந்த படம் 'தாளம்' என்று தமிழில் டப் செய்யப்பட்டது.

இரண்டு மொழிகளிலும் ஹரிஹரன் தான் பாடி இருகிறார். இந்த பாடல் தரும் feel வேற லெவல் என்று தான் சொல்ல வேண்டும். முதல் முறை கேட்கும்போது இப்படியும் ஒரு பாடலை கம்போஸ் செய்ய முடியுமா என்றே தோன்றியது!

இந்த பாடல் சங்கராபரணம் என்னும் ராகத்தில் தொடங்கும். சரணம் கல்யாணில் இருக்கின்றது. கடைசி இரண்டு வரியில் மட்டும் கோசலம் என்னும் ராகத்திற்கு செல்கிறது. 'சுந்தரி - கண்ணால் ஒரு சேதி' என்ற பாடலும் 'கல்யாணி - கோசலம்' கலவை தான்.


இன்னும் சில நல்ல பாடல்களை இந்த பட்டியலில் சேர்க்காமல் விட்டுவிட்டேனோ என்று தோன்றுகிறது. இருந்தாலும், பல முறை சிந்தித்ததில் இவையே எனக்கு பெஸ்ட் ஆகப் படுகிறது.

இதில் ஹரிஹரன் பாடிய பாடல்கள் அதிகம் இருப்பதை கவனித்தேன்.
இரண்டு பாடல்களைத் தவிர மற்ற பாடல்கள் எல்லாம் தொன்னூறுகளில் வந்த பாடல்கள். 2010க்குப் பிரவு வந்த பாடல்களில் ஒன்று மட்டுமே உள்ளது.

மாற்று கருத்துகள் உள்ளவர்கள் தாராளமாக தெரிவிக்கலாம். கருத்துகளுக்கேற்ப பட்டியலை மாற்றி அமைக்கலாம்!

Friday, July 17, 2015

ஸ்ருதி என்றால் என்ன?



சூப்பர் சிங்கரில் அடிக்கடி கேட்கும் வசனம் என்றால் "ஸ்ருதி கொஞ்சம் வெலகிடுச்சு"
சுருதினா என்னங்க? அது எப்புடிங்க விலகும்?
நான் ஒரு விளக்கம் தரேன்.

இசையில் எழு ஸ்வரங்கள் இருக்கிறது.
ச ரி க ம ப த நி

இன்னும் டெக்னிகலா சொன்னா ரி க ம த நி... இந்த ஐந்து ஸ்வரங்களுக்கும் இரண்டு நிலை உள்ளன. ரி1, ரி2, க1, க2, ம1, ம2, த1, த2, நி1, நி2 என்று சொல்லலாம். ஆங்கிலத்தில் இவற்றை செமிடோன்ஸ் (semitones) என்பர். 
எனவே மொத்தம் பன்னிரண்டு செமி டோன்ஸ் (ச, ரி1, ரி2, க1, க2, ம1, ம2, ப, த1, த2, நி1, நி2 or C, C# D, D#, E, F, F#, G, G#, A, A#, B) இருக்கின்றது என்பதை அறிகிறோம். 

இது என்ன பன்னிரண்டு கணக்கு என்பதை வேறு ஒரு பதிவில் டீடைலாக சொல்கிறேன். 

இப்போது ஒரு கேள்வி உங்களுக்கு...

கீழே உள்ள படத்தை பாருங்கள். ஒரு புள்ளி தான் உள்ளது. அந்த புள்ளி வழியாக செல்லும் எத்தனை நேர் கோடுகளை உங்களால் வரைய முடியும்?
How many lines can you draw which can pass through a single point?



விடை 'முடிவிலி' (infinity) ஆகும்.


இப்போது இந்த படத்தை பாருங்கள். இரண்டு புள்ளிகள் உள்ளன.
இப்போது நீங்கள் மறுபடியும் நேர்கோடு வரையவேண்டும். அந்த கோடு இந்த இரண்டு புள்ளிகளின் வழியாகவும் செல்லவேண்டும். இது போன்ற எத்தனை கோடுகளை உங்களால் வரைய முடியும்?
How many lines can you draw which can pass through two points?


விடை: ஒன்று.

ஒரே ஒரு கோடு மட்டும் தான் உங்களால் வரைய முடியும்!

அந்த கோடு தான் சுருதி.
அந்த இரண்டு புள்ளிகள் தான் 'ச', 'ப' என்னும் இரண்டு ஸ்வரங்கள்.

'ச', 'ப' என்னும் இரண்டு ஸ்வரங்களையும் ஏற்றிச் செல்லும் கோடு தான் சுருதி.
ஒவ்வொரு ஸ்வரத்திற்கும் ஒவ்வொரு அதிர்வெண் (frequency) உள்ளது. பொதுவாக 'ச' என்னும் ஸ்வரத்திற்கு '265.6 Hz' அதிர்வெண் இருக்கும்.

ஒரு பாடல் பாடப்படும்போதோ வாசிக்கப்படும்போதோ ஒரே ஸ்ருதியில்  (ஒரே நேர் கோடு) இருக்க வேண்டும். சில நேரம் நாம் நம்மை அறியாமல் 'ச', 'ப' வின் அதிர்வெண்ணை மாற்றி விடுவோம். அதாவது இரண்டு புள்ளிகளின் இடம் பாரி விடும். அப்போது மாறிய இடங்களில் உள்ள புள்ளிகளை இணைக்க வேறு ஒரு கோடு தான் நாம் வரைய வேண்டும். வேறு ஒரு கோடு என்றால் வேறு ஒரு ஸ்ருதி என்று அர்த்தம். இதுவே சுருதி விலகுதல் ஆகும்.

உதாரணம் சொன்னால் இன்னும் நன்றாக புரியும்...


இரண்டு பேர் சேர்ந்து ஒரு பாடலை பாடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இருவரும் முதலில் சரியான ஸ்ருதியில் படுகிறார்கள். நடுவில் ஒருவர், தன்னை அறியாமல், 'ச' வின் அதிர்வெண்ணை சற்று அதிகரித்து பாடி விடுகிறார். இன்னொருவர் மாற்றாமல் அதே நிலையில் பாடுகிறார் என்றால், கேட்பவருக்கு ஒரு பாடகர் ஸ்ருதியை மாற்றி விட்டார் என்பது தெரிந்து விடும்.



சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் ஒருவர் சோலோவாக பாடுகிறார், ஆர்செஸ்ட்ராவுடன் என்றால், இசைக்குழுவும், பாடுபவரும் ஒரே ஸ்ருதியில் பாட வேண்டும். பொதுவாக வாசிப்பில் ஸ்ருதி அதிகம் பிறழாது, அதுவும் கீபோர்ட் போன்ற எலக்ட்ரானிக் வாதியங்களில். எனவே பாடகர், எங்கேயாவது 'ச' அல்லது 'ப'வின் அதிர்வெண்ணை மாற்றினால், அப்போது இசைக்குழுவின் ஸ்ருதிக்கும் பாடகர் ஸ்ருதிக்கும் உள்ள வேறுபாடு தெரிந்துவிடும்.

Wednesday, July 8, 2015

SYLLOGISM - LOGICAL DEDUCTION MADE EASY!

Hello Everybody!!

Engineering made me a bit busy. I couldn't post new stuff in my blog for a long time. Now I'm back and I have something new.


Syllogism or Logical Deduction is an interesting topic found in many analytical reasoning aptitude question papers. But for beginners, it would be confusing. This post would teach you each and every thing in syllogism. Step by step method to get an answer.Once you go through them, you'll be able to answer any any question in syllogism or logical deduction. In my next post, I'll provide a summary of rules, which helps to find the answer in a fraction of second.

Now let's start with syllogism.

Now Look at this question.

There are two statements below!
All youngsters are students.
All students are brilliant.

You can infer the following from the above statements.

1. There are three terms in totally in the two statements. They are 'youngster', 'student' & 'brilliant'.

2. The term 'student' is common in  both the statements.

Did you notice them??
Yes? Then it means you are familiar with the first rule.

RULE 1: There should be three terms in both the statements, with one term common in both of them.

When you find a question, which doesn't follow this rule, simply choose the option, 'No conclusions can be drawn.'

Look at this sample.

All sheets are papers.
All books are notes.

Conclusions: Some sheets are notes. Some books are papers.

There are four terms in the two statements and nothing is common. So just the answer is ' Both the conclusions are false.'

The first rule is the like 'qualifier'. The first rule would tell you whether any conclusions can be drawn are not. That is, it checks if the question has an answer or not. If yes, then rule 2 will help you to find out it.

RULE 2:

The first rule dealt with the distribution of terms. We didn't care about the word 'All' in the question.
Rule 2 deals with it.

Look at the following list of statements.

All boys are men.
Some boys are men.
Some boys are not men.
No boys are men.

Any statement you encounter, will be surely one of those four types.
That is, any statement would either have 'All' ,or 'Some' or 'Some not' or 'No'. I call them 'Keywords'.
Some times synonyms of these words are used.

Synonyms for all = Any, Each, Every.
Synonyms fir some = At least, Few, Many, Most of.

But what you see in questions is not a single statement, but a combination of two statements.
Both the statements in the question will be from those four types in any combination.

Now we shall extend the rule 2 to some sub-rules.

RULE 2A:

The statement Some A is B is same as Some B is A.

Hence, "Some boys are men" can be written as "Some men are boys."

RULE 2B:

The statement No A is B is same as No B is A.

Hence, "No boys are men" can be written as "No men are boys."

RULE 2C:

The statement No A is B can bed inferred as  Some A are not B and  Some B are not A.

Hence, "No boys are men" can be written as "Some boys are not men" can be written as "Some men are not boys."

RULE 2D:

This rule is very important.
The statement All A are B can be inferred as Some A are B and Some B are A.

Hence, "All boys are men" can be written as "Some boys are men." and "Some men are boys."

Never forget any of the above rules.
Now let's solve different possible types of problems.

TYPE 1:

ALL + ALL COMBINATION DIAGONAL:

Look at this question.

All mobiles are computers.
All computers are laptops.

Step 1: Look for keywords.
Statement 1 has 'All' & statement 2 also has 'All'.

Step 2: Now look at the terms. Find which term is common.
The term 'computer' is common.

Step 3: Now look the term computer's position. Whether they are straight or diagonal.
It is diagonal. (because, in 1st statement, computer is the 2nd term, & in 2nd statement, computer is the 1st term.)

The following observation can be denoted as
All x All

The solution for this type is

All x All  =  All

So the conclusions that we can derive the following conclusions.

All mobiles are laptops.
And of course by rule 2D, we also get,
Some mobiles are laptops.
Some laptops are mobiles.

TYPE 2:

ALL + ALL COMBINATION LINEAR.

Look at this question.

All computers are laptops.
All computers are mobiles.
Step 1: Look for keywords.
Statement 1 has 'All' & statement 2 also has 'All'.

Step 2: Now look at the terms. Find which term is common.
The term 'computer' is common.

Step 3: Now look the term computer's position. Whether they are straight or diagonal.
It is straight (linear). (because, in 1st statement, computer is the 1st term, & in 2nd statement, computer is the 2nd term.)

The following observation can be denoted as
All + All

The solution for this type is

All + All  =  Some

So the conclusions that we can derive the following conclusions.

Some laptops are mobiles.
And by rule 2A, we also get,
Some mobiles are laptops.

TYPE 3:

ALL + SOME COMBINATION.

Look at this question.

All computers are laptops.
Some computers are mobiles.
Step 1: Look for keywords.
Statement 1 has 'All' & statement 2 has 'some'.

Step 2: Now look at the terms. Find which term is common.
The term 'computer' is common.

Step 3: No need to check linearity when 'Some' is present in any one of the statement.
This is because of rule 2A. By this rule, Some A is B is same as Some B is A. So, the position doesn't matter when 'some' appears in any of the statements.

The following observation can be denoted as
All + Some
The solution for this type is

All + Some =  Some

So the conclusions that we can derive the following conclusions.

Some laptops are mobiles.
And by rule 2A, we also get,
Some mobiles are laptops.


TYPE 4:

ALL + SOME NOT COMBINATION.

Look at this question.

All computers are laptops.
Some computers are not mobiles.

Step 1: Look for keywords.
Statement 1 has 'All' & statement 2 also has 'some not'.

Step 2: Now look at the terms. Find which term is common.
The term 'computer' is common.

Step 3: Not needed because of Rule 2C.

The following observation can be denoted as
All + Some not

The solution for this type is

All + Some not  =  Some not

So the conclusions that we can derive the following conclusions.

Some laptops are not mobiles.

TYPE 5:

ALL + NO COMBINATION LINEAR.

Look at this question.

All computers are laptops.
No computers are mobiles.

Step 1: Look for keywords.
Statement 1 has 'All' & statement 2 also has 'No'.

Step 2: Now look at the terms. Find which term is common.
The term 'computer' is common.

Step 3: There is no some or some not used in any of the statements. Hence Checking linearity is needed. Now look the term computer's position. Whether they are straight or diagonal.
It is straight (linear). (because, in 1st statement, computer is the 1st term, & in 2nd statement, computer is the 1st term.)

The following observation can be denoted as
All + No

The solution for this type is

All + No  =  Some Not

So the conclusions that we can derive the following conclusions.
Some laptops are not mobiles.

TYPE 6:

ALL + NO COMBINATION Diagonal.

Look at this question.

All computers are laptops.
No laptops are mobiles.

Step 1: Look for keywords.
Statement 1 has 'All' & statement 2 also has 'No'.

Step 2: Now look at the terms. Find which term is common.
The term 'laptop' is common.

Step 3: There is no some or some not used in any of the statements. Hence Checking linearity is needed. Now look the term laptop's position. Whether they are straight or diagonal.
It is diagonal. (because, in 1st statement, laptop is the 2nd term, & in 2nd statement, laptop is the 1st term.)

The following observation can be denoted as
All x No

The solution for this type is

All x No  =  No

So the conclusions that we can derive the following conclusions.
No computers are mobiles
And by rule 2B and 2C, we also get,
Some computers are not mobiles.
Some mobiles are not computers.

TYPE 7:

This is the last type.
SOME + NO COMBINATION.

Look at this question.

Some computers are laptops.
No laptops are mobiles.

Step 1: Look for keywords.
Statement 1 has 'Some' & statement 2 also has 'No'.

Step 2: Now look at the terms. Find which term is common.
The term 'laptop' is common.

Step 3: The term some is found. Hence, by rule 2A, we can skip this step.

The following observation can be denoted as
Some + No
The solution for this type is

Some + No = Some not
So the conclusions that we can derive the following conclusions.
Some computers are not mobiles.

Now you may ask what happened for the following combinations.
No + No
Some + Some
Some + Some Not,
Some Not  +Some Not,
Some not + No

All these five give no conclusions.
Look at all of them, none of them has 'All' in it. None of them give particular information about the terms present in the statements.

Whenever you find such combinations, go for, ' No conclusions can be drawn.'

That's all guys.
Now you are an expert in Syllogism. My next post will have a summary of the above rules and types with problems for practice along with solution.

Hope it was useful.

Wednesday, February 11, 2015

அறியாத கதைகள் 3: பாகவதத்தில் இண்டர்ஸ்டெல்லார் (interstellar)

அறியாத கதைகள் முதல் பகுதியில் மகாபாரதத்தில் உள்ள ஒரு நிகழ்வு பற்றி எழுதி இருந்தேன். இப்போது பாகவதத்தில் இருந்து, ஒரு சின்ன பகுதியை இங்கே பதிவு செய்ய இருக்கிறேன்.



இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் வாங்கிய நூல்களில் ஸ்ரீமத் பாகவதமும் ஒன்று. அதில் ஒன்பதாவது ஸ்கந்தத்தில் ஒரு கதை வந்தது. அது படித்தவுடன் எனக்கு ஞாபகம் வந்தது இண்டர்ஸ்டெல்லார் (interstellar) திரைப்படம் தான்.
கிறிஸ்டோபர் நோலன் ஒரு ஜீனியஸ். அவரது படத்தைப் புரிந்துகொள்ளவே தனி மூளை வேண்டும். சரி. அவர் இயக்கிய இண்டர்ஸ்டெல்லார் படத்துக்கும் பாகவதத்துக்கும் என்ன சம்மந்தம்?

கால நீட்டிப்பு தான் இண்டர்ஸ்டெல்லார் படத்தின் கரு. அதாவது, படத்தில் நாயகன் செல்லும் கார்காஞ்சுவா (Gargantua) என்னும் கிரகத்தில் ஒரு மணி நேரம் நீங்கள் கழித்தால் பூமியில் எழு ஆண்டுகள் போய்விடும். ( சிறப்பு சார்பியல் கொள்கையில் ஐன்ஸ்டீன் சொன்னது.. இந்த கால நீட்டிப்பு).

இதே கால நீட்டிப்பை பாகவதத்தில் உள்ள ஒரு கதையிலும் கண்டேன். அந்த கதை இதோ:

ரேவதன் என்னும் அரசன் கடல் உள்ளே துவாரவதீ என்னும் நகரை நிர்மாணித்து ஆண்டு வந்தான். அவனுக்கு நூறு பிள்ளைகள். மூத்தவன் ககுத்மி.

ககுத்மியின் மகள் ரேவதி. பேரழகியாம். அவளுக்கு ஏற்ற மணாளன் இந்த பூவுலகில் இல்லை என்று எண்ணி, நேராக சத்யலோகம் சென்று பிரம்மரிடம் கேட்டுவிட முடிவு செய்தான்.

ககுத்மி போன்ற ஆன்றோர்களால் சத்யலோகம் செல்ல முடியுமாம். (ஆனால் எப்படி போனார் என்று எல்லாம் குறிப்பிடப் படவில்லை) 

தன் மகளுடன் ககுத்மி பிரம்மலோகம் சென்றான். அங்கே இசை-நாட்டியக் கச்சேரி நடந்து கொண்டு இருந்ததால் பிரம்ம தேவரை உடனே சந்திக்க முடியவில்லை. கொஞ்ச நேரம் போன பிறகு பிரம்மாவைக் கண்டு வணங்கி அவரிடம் தன கோரிக்கையை வைத்தார் ககுத்மி. 

"பிரம்ம தேவா! என் மகள் ரேவதிக்கு இணையான மணாளன் யார் இந்த பூலோகத்தில் இருக்கிறார்?" 

பிரம்மா சிரித்துக்கொண்டே சொன்னார்..

"ககுத்மி! நீ பூலோகத்தை விட்டு கிமபும்போது இருந்த அனைவரும் காலத்தால் கவரப்பட்டுவிட்டனர். அவர்களது மகன்கள், பேரப்பிள்ளைகள், என் அவர்களது வம்சமே இப்போது இல்லை. 

நீ இங்கே வந்து சில காலம் தான் ஆனது. அனால் பூமியில் 27 சதுர்யுகங்கள் முடிந்து இருக்கும். "

27 சதுர்யுகங்கள் என்றால் 27 x 4 = 108 யுகங்கள். 

கலி யுகம்: 432000 ஆண்டுகள்.
த்வாபர யுகம்: 2 x 432000 ஆண்டுகள்.
திரேதா யுகம்: 3 x 432000 ஆண்டுகள்.
கிருத யுகம்: 4 * 432000 ஆண்டுகள்.

இந்த நான்கும் சேர்ந்தது தான் ஒரு சதுர்யுகம். எனவே ஒரு சதுர்யுகத்தில் 10 x 432000 = 4320000 ஆண்டுகள் இருக்கும்.

108 சதுர்யுகங்கள் என்றால் 108 x 4320000 = 46,65,60,000 ஆண்டுகள்.
அதாவது 46 கோடியே 65 லட்சத்தி 60 ஆயிரம் ஆண்டுகள்.

எனவே ககுத்மி பிரம்மலோகம் வந்தநேரத்தில்  பூமியில் 466560000 ஆண்டுகள் முடிந்துவிட்டது. இப்போது எல்லாம் அங்கே மாறிப்போய் இருக்க வேண்டும்.

பிரம்ம மேலும் சொன்னார், "இப்போது பூமியில் த்வாபர யுகம் நடக்கிறது. அங்கே உள்ள பலராமன், பகவானின் அம்சம். அவரே உன் மகளுக்கு ஏற்ற ஜோடி."

பூமிக்கு திரும்பிய ககுத்மி அங்கே தன வம்சமே இல்லாமல்போனது தெரிய வந்தது. பலராமருக்கு தன மகள் ரேவதியை கல்யாணம் செய்துவிட்டு வனவாசம் சென்றார்.

Monday, February 9, 2015

இரண்டு வலைப் பூக்களை இணைப்பது எப்படி?

பல பதிவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வலைபூக்கள் வைத்து இருப்பார்கள், சிலர், ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அக்கௌன்டிலிருந்து பதிவிட்டு இருப்பார். இப்போது வேறு ஒரு ஐ.டி. பயன்படுத்துவார்கள்.

பழைய வலைப்பூவில் உள்ள பதிவுகளை அதில் உள்ள பின்னூட்டங்களுடன் புதிய வலைப்பூவிற்கு மாற்ற முடியமா?

முடியும். அதற்கு பிளாக்கரில் மிகவும் எளிய வழி இருக்கிறது.

STEP 1:

முதலில், நீங்கள் எந்த ப்ளாகில் இருந்து உங்கள் பதிவுகளை மாற்ற வேண்டுமோ அந்த ப்ளாகிற்கு சென்று login செய்யுங்கள்.

STEP 2:

இப்போது உங்கள் ப்ளாகிற்கு சென்று settingsஐ கிளிக் செய்து அதில் உள்ள Othersஐ கிளிக் செய்யுங்கள்.



STEP 3:

அடுத்து blog toolsஇல் உள்ள Export Blogஐ கிளிக்குங்கள்.



STEP 4:

படத்தில் காட்டியுள்ளது போல ஒரு dialog box தோன்றும். அதில் Download Blog என்னும் பட்டனை கிளிக் செய்யவும். உடனே, உங்கள் ப்ளாகில் உள்ள அனைத்து பதிவுகளும் .xml பார்மேட்டில் ஒரு கோப்பாக உங்கள் கணினியில் பதிவிறக்கம் ஆகிவிடும்.



STEP 5:

இப்போது, அந்த ப்ளாகிலிருந்து  வெளியேறி, உங்களது புது ப்ளாகில் (அல்லது எந்த ப்ளாகில் உங்கள் பழைய பதிவுகளைப் போட வேண்டுமோ அந்த ப்ளாகில்) உள்நுழையவும். மீண்டும் அதே settings > othersக்கு செல்லவும். இப்போது 'import blog' என்னும் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.



STEP 6:

உங்கள் கணினியில் பதிவான .xml fileஐத் தேர்வு செய்யவும்.



அவ்வளவு இப்போது உங்கள் ப்ளாகை பார்க்கவும். எல்லா பதிவுகளும், நீங்கள் முன்பு போட்டிருந்த அதே தேதியில் (நீங்கள் அந்த பதிவை 2012 நவம்பரில் போட்டு இருந்தால், இப்போதும் அதே நவம்பர் 2012 என்றே காட்டும்.. கவலை வேண்டாம்.)

இன்னொரு சிறப்பு என்னவென்றால், உங்கள் பதிவிருக்கு கொடுக்கப்பட்ட பின்னூட்டங்களும் அப்படியே இருக்கும். ஆனால் பார்வைகள் 0 என்று தான் இருக்கும். 

எப்படியும் பின்னூட்டங்கள் பதிவுடன் உங்களுக்கு கிடைக்கும்.


Saturday, February 7, 2015

ராகங்களில் அமைந்த ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள்


சில ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஒரு வலைப்பதிவில் எழுதிக் கொண்டு இருந்தேன். பின்பு அதில் எழுதுவதை நிறுத்திவிட்டேன். இப்போது தான் மீண்டும் பதிவிடத் தொடங்கி இருக்கிறேன். இந்த பதிவு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் என் பழைய ப்ளாகில் எழுதியது. ஆயிரத்து நூறு பார்வைகளைக் கடந்த என் ஒரே பதிவு இது தான். அந்த ப்ளாகை டிலீட் செய்து விட்டதால், தற்போது மீண்டும் 'நாரதன்'இல் சில திருத்தங்களுடனும் மாற்றங்களுடனும் புதிய பாடல்களையும் சேர்த்து பதிவிடுகிறேன்.

இந்த பதிவில் ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்த தமிழ் பாடல்களும், அவை அமைக்கப் பட்ட கர்நாடக ராகங்களையும் பட்டியல் இட்டு உள்ளேன். நான் ரஹ்மானின் பெரிய விசிறி என்பதால் அவரது பாடல்கள் எல்லாமே எனக்கு ஓரளவுக்கு தெரியும். என் பழைய ப்ளாகில் உள்ள பதிவில் விண்ணை தாண்டி வருவாயா பாடல்கள் வரை தான் சேர்த்து இருந்தேன். இந்த பதிவில்  'ரோஜா'வில் ஆரம்பித்து 'லிங்கா'வரை உள்ள பல பாடல்கள் இதில் அடக்கம். 





எண்பாடல்ராகம்



1மெட்டுப் போடு (டுயட்)ஆனந்த பைரவி
2அன்பென்ற மழையிலே (மின்சாரக் கனவு)ஆனந்த பைரவி
3சொல்லாயோ சோலைக்கிளி (அல்லி அர்ஜுனா)மாயாமாளவகௌளை
4நதியே நதியே (ரிதம்)ஆனந்த பைரவி
5கண்ணோடு காண்பதெல்லாம் (ஜீன்ஸ்)ஆபேரி
6உதயா உதயா (உதயா)சாருகேசி
7தாய் சொன்ன தாலாட்டு (தேசம்)சாருகேசி
8ஏதோ ஏதோ ஒன்று (எனக்கு 20 உனக்கு 18)சாருகேசி
9பாய்சை எங்க வைக்காதே (பாய்ஸ்)ஹம்சத்வனி
10காற்றே என் வாசல் வந்தாய் (ரிதம்)தர்பாரி கானடா
11ஒட்டகத்த கட்டிக்கோ (ஜென்டில்மேன்)தர்மவதி
12பாக்காதே பாக்காதே (ஜென்டில்மேன்)மோகனம்
13எது சுகம் சுகம் (வண்டிச்சோலை சின்னராசு)தர்மவதி
14மோனாலிசா (மிஸ்டர் ரோமியோ)காவதி
15நிலா காய்கிறது (ஹமீர் கல்யாணி)ஹமீர் கல்யாணி
16வெள்ளை பூக்கள் (கன்னத்தில் முத்தமிட்டால்)ஹம்சத்வனி
17என் காதலே (டூயட்)ஹரிகாம்போதி
18மார்கழி பூவே (மே மாதம்)ஹிந்தோளம்
19புது வெள்ளை மழை (ரோஜா)கானடா
20தீக்குருவி (கண்களால் கைது செய்)ஹம்சத்வனி
21என்மேல் விழுந்த மழைத்துளியே (மே மாதம்)காபி 
22கப்பலேறிப் போயாச்சு (இந்தியன்)காபி
23காதல் ரோஜாவே (ரோஜா)காபி (முதல் ஆலாப் தேஷ் ராகம்)
24டுயட் சாக்ஸ் இசை (டுயட்)கல்யாண வசந்தம்
25சக்தி கொடு (பாபா)கல்யானோ
26திறக்காதக் காட்டுக்குள்ளேகேதார் + நீலாம்பரி
27என் சுவாசக் காற்றே (என் சுவாசக் காற்றே)கல்யாணி
28என்னவளே (காதலன்)கேதாரம்
29என்னை காணவில்லையே (காதல் தேசம்)கீரவாணி
30அஞ்சலி அஞ்சலி (டூயட்)மாண்டு
31சௌக்கியமா (சங்கமம்)மாண்டு
32போர்க்களம் (தெனாலி)மாண்டு
33தோம் கருவில் இருந்தோம் (ஸ்டார்)மத்யமாவதி
34ஏ முத்து பாப்பா (வண்டிசோலை சின்னராசு)மத்யமாவதி
35கோலம்பஸ் (ஜீன்ஸ்)மத்யமாவதி
36ஒரு பொய்யாவது சொல் (ஜோடி)காபி
37நெஞ்சினிலே (உயிரே)மிஸ்ர பைரவி **
38என்ன சொல்லப் போகிறாய் (கண்டுகொண்டேன் கண்டுபோனேன்)மிஸ்ர கீரவாணி **
39கையில் மிதக்கும் கனவா நீ (ரட்சகன்)ஹமீர் கல்யாணி
40ஹலோ மிஸ்டர் எதிர்கட்சி (இருவர்)நடபைரவி
41சந்திரலேகா (திருடா திருடா)நடபைரவி
42பூம் பூம் (பாய்ஸ்)மோகனம்
43ஒருநாள் ஒருபொழுது (அந்திமந்தாரை)நாடகுறிஞ்சி
44கண்ணாமூச்சி ஏனடா (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்)நாடகுறிஞ்சி
45மச்சினியே (ஸ்டார்)பந்துவராளி
46அழகான ராட்சசியே (முதல்வன்)ரீதிகௌளை
47அழகே சுகமா (பார்த்தாலே பரவசம்)சஹானா
48சுட்டும் விழிச்சுடர் தான் (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்)சாரங்கா + ஹம்சானந்தி
49என்வீட்டு தோட்டத்தில் (ஜென்டில்மேன்)செஞ்சுருட்டி 
50நெஞ்சே நெஞ்சே (ரட்சகன்)சங்கராபரணம்
51என்னுயிர் தோழியே (கண்களால் கைது செய்)பஹுதாரி
52இன்னிசை அளபெடையே (வரலாறு)சுத்த தன்யாசி
53மார்கழி திங்கள் அல்லவா (சங்கமம்)சிந்து பைரவி
54சிநேகிதனே (அலைபாயுதே)சிந்து பைரவி
55எங்கே எனது கவிதை (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்)சிந்து பைரவி
56தண்ணீரைக் காதலிக்கும் (மிஸ்டர் ரொமியோ)சிவரஞ்சனி
57கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் (திருடா திருடா)சிவரஞ்சனி
58தீண்டாய்  மெய் தீண்டாய் (என் சுவாசக் காற்றே)ஸ்ரீராகம்
59குறுக்கு சிறுத்தவளே (முதல்வன்)வாஸந்தி
60அடி மஞ்ச கிழங்கே (தாஜ் மஹால்)வாஸந்தி
61வராஹ நதிக்கரையோரம் (சங்கமம்)மாண்டு 
62விடுகதையா (முத்து)சக்கரவாகம்
63அன்பே அன்பே (ஜீன்ஸ்)கரஹரப்ரியா
64மன்மத மாசம் (பார்த்தாலே பரவசம்)வாஸந்தி + ஹம்சத்வனி
65தங்கத் தாமரை மகளே (மின்சாரக் கனவு)சிவரஞ்சனி*
66அரபிக் கடலோரம் (பம்பாய்)பூர்ணகாம்போதி
67தீயில் விழுந்த தேனா (வரலாறு)வாஸந்தி 
68காதல் சடுகுடு குடு (அலைபாயுதே)நடபைரவி
69நறுமுகையே (இருவர்)நாட்டை
70நேற்று இல்லாத மாற்றம் (புதிய முகம்)பிலஹரி
71ஓமனப் பெண்ணே (விண்ணைத் தாண்டி வருவாயா) பிலஹரி
72ஆரோமாலே (விண்ணைத் தாண்டி வருவாயா) பாகேஸ்ரீ
73உயிரும் நீயே (பவித்ரா)கமாஸ்
74காதல் அணுக்கள் (எந்திரன்)பிலஹரி
75வாங்க மக்கான் வாங்க (காவியத்தலைவன்)பிலஹரி
76தமிழா தமிழா (ரோஜா)தர்மவதி
77நியூ யார்க் நகரம் (சில்லுனு ஒரு காதல்)நடபைரவி
78குலுவாலிலே (முத்து)யதுகுல காம்போஜி
79மெதுவாகத்தான் (கோச்சடையான்)கல்யாணி
80மணப்பெனின் சத்தியம் (கோச்சடையான்)த்விஜாவந்தி
81மணமகனின் சத்தியம் (கோச்சடையான்)த்விஜாவந்தி
82கொஞ்சும் மைனாக்களே (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்)பல்லவி மத்யமாவதி, மற்றவை கரஹரப்ரியா
83ஓ நண்பா (லிங்கா)மாயாமாளவகௌளை
84 சம்பா சம்பா (லவ் பர்ட்ஸ்) மோகனம்
85 ஏ மாண்புறு மங்கையே (குரு) யமன் கல்யாணி
86 வெண்ணிலா வெண்ணிலா (இருவர்) சலநாட்டை
87 வெள்ளி மலரே (ஜோடி) மேக மலஹர் (ஹிந்துஸ்தானி)
88 கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்) நளினாகாந்தி + கடனகுதுகலம்
89 சொன்னாலும் கேட்பதில்லை (காதல் வைரஸ்) நளினகாந்தி
90 அன்பின் வாசலே (கடல்) சாருகேசி
91 கன்னத்தில் முத்தமிட்டால் (கன்னத்தில் முத்தமிட்டால்) காபி
92 போறாளே பொன்னுதாயி டூயட் (கருத்தம்மா) மோகனம்
93 போறாளே பொன்னுதாயி சோலோ (கருத்தம்மா) சிவரஞ்சனி
94 மின்சாரப் பூவே (படையப்பா) வசந்தா
95 வாடி சாத்துக்குடி (புதிய மன்னர்கள்) குந்தலவராளி

A.R.Rahman Tamil Songs In Carnatic Ragas


I had already posted this article in my previous blog. It counted over 1100 views. But i have decided to close my old blog. So, I'm reposting in this blog for you all with some additions and corrections.





S.No Song Raaga



1 Mettu podu (Duet) Aanandha Bairavi
2 Anbendra Mazhaiyile (Minsara Kanavu) Aanandha Bairavi
3 Sollayo Solaikili (Alli Arjuna) Maayamalavagowlai
4 Nathiye (Rhythm) Aanandha Bairavi
5 Kannodu Kaanbadhellam (Jeans) Abheri
6 Udhaya Udhaya (Udhaya) Charukesi
7 Thaai sona Thaalattu (Desam / Swades) Charukesi
8 Etho Etho Ondru (Enakku 20 Unakku 18) Charukesi
9 Dating / Boys-ai yenga vaikkadhe (Boys) Hamsadwani
10 Kaatre En Vasal Vandhai (Rhythm) Darbaari Kanada
11 Otagatha Katiko (Gentleman) Dharmavathi
12 Paakkadhe Paakkadhe (Gentleman) Mohanam
13 Edhu Sugam Sugam (vandicholai chinnarasu) Dharmavathi
14 Monalisa (Mr.Romeo) Gavathi
15 Nila Kaaigiradhu (Indhra) Hameer Kalyani
16 Vellai Pookkal (Kannathil muthamittal) Hamsadhwani
17 En Kadhale (due) Hari Kambodhi
18 Maargazhi Poove (May Maatham) Hindolam
19 Pudhu Vellai Mazhai (Roja) Kaanada
20 Theekkuruvi (Kangalal Kaidhu Sei) Hamsadwani
21 En Mel Vizhundha Mazhai Thuli (May Maatham) Kaapi
22 Kappal Yeri Poyaachu (Indian) Kaapi
23 Kadhal Rojave (Roja) Kaapi (Allap is in Desh Raaga)
24 Duet Sax piece (Duet) Kalyana Vasantham
25 Shakthi Kodu (Baba) Kalyani
26 Thirakkadha Kaattukulle (En Swasa kaatre) Kedar + Neelambari
27 En Swasa Kaatre (En Swasa Kaatre) Kalyani (not a pure Kalyani though)
28 Ennavale (Kaadhalan) Kedharam
29 Ennai Kaanavillaye (Kaadhal Desam) Keeravani
30 Anjali Anjali (Duet) Maand
31 Sowkiyama (Sangamam) Maand
32 Porkalam (Tenali) Maand
33 Thom Karuvil Irundhom (star) Madhyamavathi
34 Ye Muthu Paapa (Vandicholai Chinnaraasu) Madhyamavathi
35 Columbus (Jeans) Madhyamavathi
36 Oru poyyavadhu Sol (Jodi) Kaapi
37 Nenjinile Nenjinile (Uiyre/Dil Se) Misra Bhairavi **
38 Enna solla Pogiraai (Kandukonden Kandukonden) Misra Kiravani **
39 Kaiyil Midhakkum Kanava Nee (Ratchagan) Hameer Kalyani
40 Hello Mister Thenkatchi (Iruvar) Bhairavi
41 Chandra Lekha (Thiruda Thiruda) Bhairavi
42 Boom Boom (Boys) Mohanam
43 Orunaal Orupozhudhu (Anthimandharai) Natakurinji
44 Kannamoochi (Kandukonden Kandukonden) Natakurinji
45 Machiniye (Star) Panthuvarali
46 Azhagana Ratchasiye (Mudhalvan) Reethigowlai
47 Azhage Sugama (Paarthaale Paravasam) Sahana
48 Suttum Vizhi (Kandukonden Kandukonden) Saranga and Hamsanandhi
49 En Veetu Thotathil (Gentleman) Senchurutti
50 Nenje Nenje (Ratchagan) Shankarabaranam
51 Ennuyir thozhiye (Kangalal kaidhu Sei) Bahudari
52 Innisai Alabedaye (Varalaru) Shuddha Dhanyasi
53 Maargazhi Thingal (Sangamam) Sindhu Bhairavi
54 Snehithane (Alai Payuthe) Sindhu Bhairavi
55 Enge Enadhu Kavithai (Kandukonden Kandukonden) Sindhu Bhairavi
56 Thaneerai Kathalikum (Mr.Romeo) Sivaranjani
57 Kannum Kannum Kollai (Thiruda Thiruda) Sivaranjani
58 Theendaai (En Swasa kaatre) Sri Raagam
59 Kurukku Siruthavale (Mudhalvan) Vaasanthi
60 Adi Manja Kizhange (Taj Mahal) Vaasanthi
61 Varaga Nathi karaai (Sangamam) Yaman kalyani
62 Vidukadhaya (Muthu) Chakkaravakam
63 Anbe Anbe (Jeans) Kharaharapriya
64 Manmadha Maasam (Paarthale Paravasam) Vaasanthi + Hamsadwani
65 Thanga Thaamarai Magale (Minsara Kanavu) Sivaranjani *
66 Arabi Kadaloram (Bombay) Poornakambodhi
67 Theeyil Vizhundha Thena (Varalaru The GodFather) Vaasanthi
68 Kadhal Sadugudu (Alaipayuthe) Natabhairavi
69 Narumugaiye (Iruvar) Naattai
70 Netru Illadha Matram (Pudhiya Mugam) Bilahari
71 Omana Penne (VTV) Bilahari
72 Aromale (VTV) Bhaageshri
73 Uyirum Neeye (Pavithra) Kamaas
74 Kadhal Anukkal (Endhiran) Bilahari
75 Vaanga Makkan Vaanga (Kaaviya thalaivan) Bilahari
76 Thamizha Thamizha (Roja) Dharmavathi
77 New York Nagaram (Sillunu Oru Kaadhal) Natabhairavi
78 kuluvalilae (muthu) Yadhukula Khaambodhi
79 Medhuvaagathaan (Kochadaiyaan) Kalyani
80 Manappennin Sathiyam (Kochadaiyaan) Dwijavanthi
81 Manamaganin Sathiyam (Kochadaiyaan) Dwijavanthi
82 Konjum Mainaakkale (Kandukonden Kandukonden) Madhyamavathi (Pallavi), Rest Kharaharapriya
83 Oh Nanba (Lingaa) Mayamalavagowlai
84 Samba Samba (Love Birds) Mohanam
85 Ye Maanburu Mangaiye (Guru) Yaman Kalyani
86 Vennila Vennila(Iruvar) Chalanattai
87 Velli Malare (Jodi) Megh Malahar
88 Kandukonden Kandukonden (Kandukonden Kandukonden) Nalinakanthi + Katanakuthukalam
89 Sonnalum Ketpadhillai (Kadhal Virus) Nalinakanthi
90 Anbin Vaasale (Kadal) Charukesi
91 Kannathil Muthamittal (Kannathil Muthamittal) Kaapi
92 Porale Ponnuthayee Duet Version (Karuthamma) Mohanam
93 Porale Ponnuthayee Solo Version (Karuthamma) Sivaranjani
94 Minsara Poove (Padayappa) Vasantha
95 Vaadi Sathukudi (Puthiya Mannargal) Kunthalavarali

Wednesday, February 4, 2015

அறியாத கதைகள் 2: என் ஆசிரியரை எப்படி தண்டிப்பேன்?


இந்த கதையை என் ஏழாம் வகுப்பு ஆங்கிலப் பாட புத்தகத்தில் படித்தது. நல்ல கதைகளை எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு படித்திருந்தாலும் கேட்டு இருந்தாலும் மறக்காது. அப்படிப்பட்ட நல்ல கதை ஒன்றைப் பகிர விரும்புகிறேன்.



பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான் நாட்டில் மார்ஷல் ஆர்ட்ஸ் (தற்காப்புக் கலை) கற்றுக் கொடுக்கும் பள்ளியில் ஒரு மாணவர் இருந்தார். அவருக்கு இருபத்தைந்து வயதுக்கு மேல் இருக்கும். 

நல்ல மாணவர் தான். இயல்பில் நல்ல குணம் கொண்டவர் தான். இருந்தும் ஒரு நாள் அவர் ஏதோ தவறு செய்துவிட்டார் போல. அவரது குரு அவருக்கு தண்டனை கொடுத்து விட்டார். மறுநாள் கோபத்தில் அந்த மாணவர் தன் குருவைத் தாக்க அவர் ஒரு பாறையின் மீது விழுந்து தலையில் காயப்பட்டு இறந்து போனார்.

அந்த மாணவனை, அந்த குருவின் மகனும், மற்ற சிஷ்யர்களும் துரத்திக்கொண்டு வந்தனர். மாணவன் பயந்து ஓடினான். எப்படியோ அவர்களுக்கு தண்ணி காட்டிவிட்டு ஒரு மலையில் ஒளிந்துகொண்டான்.

அந்த மாணவன், தான் செய்த தவறை உணர்ந்தான். குருவைக் கொன்று எத்தகைய பாவத்தை செய்துவிட்டோம் என்று எண்ணி வருந்தினான். பேசாமல், மீண்டும் தன் பள்ளிக்கே சென்று, அங்கு உள்ளவர்களிடம் மன்னிப்பு கேட்டு, அவர்கள் கொடுக்கும் தண்டனையை ஏற்றுக் கொள்ளலாமா என்று எண்ணினான். அனால் மீண்டும் அங்கு சென்றால் தனக்கு சங்கு தான் என்பதால் அவரால் எந்த முடிவும் எடுக்க இயலவில்லை.

இருந்தாலும் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் செய்து ஆக வேண்டும் என்று எண்ணினான். அவனால் என்னதான் செய்ய முடியும் என்று நினைத்தான். அப்போது அவனுக்கு ஒரு யோசனை வந்தது.

அவன் ஒளிந்து கொண்டு இருந்த மலை இரண்டு கிராமங்களைப் பிரித்தது. அந்த மலையில் பாதை எதுவும் இல்லை. நல்ல பாதை எதுவும் இல்லாததால், மழைக் காலங்களில் பலர் பாறைகளிலிருந்து வழுக்கி விழுந்து இறந்து போவது சகஜமாக இருந்தது. அதனால், அந்த மலையை சுற்றிக்கொண்டே எல்லோரும் சென்று கொண்டு இருந்தனர்.

அந்த மாணவன், தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக, அந்த மலையைக் கொடைந்து நல்ல பாதை ஒன்றை அமைக்க முடிவு செய்தான். அந்த மலையில் கிடைத்த கிழங்குகளையே உண்டு, அங்கு கிடைத்த பொருட்களை வைத்தே பாதை ஒன்றை உருவாக்கத் தொடங்கினான்.

தனி ஆளாக கிட்டத்தட்ட பாதி வேலையை முடித்து விட்டன். ஒரு நாள் அந்த மாணவன் தன் பணியைத் தொடங்கச் செல்லும்போது அவன் எதிரில் கத்தியுடன் ஒருவன் நின்றான். உற்று பார்த்தபோது தான் தெரிந்தது, அவன் தான் கொன்ற ஆசிரியரின் மகன் என்று. அவன் பழி வாங்க வந்திருப்பதை புரிந்து கொண்டான்.

ஆனால் அவன் பயந்து ஓடவில்லை. தன குருவின் மகனிடம், தான் செய்த செயலுக்குப் பிராயச்சித்தமாக இப்போது இந்த மலையில் பாதையை அமைத்துக் கொண்டு இருக்கிறேன். இந்த பாதையை முடிக்க எப்படியும் ஆறு மாதங்கள் ஆகும். எனவே அதுவரை, காத்திருந்து அதற்குப்பின் தன்னை, பழி தீர்த்துக் கொள்ளலாம் என்று வேண்டிக் கொண்டான்.

குருவின் மகன், மலையைப் பார்த்தன். அந்த மாணவன் சொல்வதில் இருந்த உண்மை அவனுக்குப் புரிந்தது. பாதிக்கும் மேல் வேலை முடிந்து இருப்பதை பார்த்தன். தன் தந்தையைக் கொன்ற மாணவனிடம் சொன்னான், 'சரி. உனக்கு நான் நான்கு மதங்கள் தான் அவகாசம் தருவேன். நான்கு மாதங்கள் முடிந்தவுடன், உன் தலையை சீவிவிடுவேன். அதற்குள், இந்த பாதை அமைக்கும் வேலையை முடித்து விடு. இங்கிருந்து தப்பிக்கும் எண்ணம் கொல்லாதே. இந்த மலையைவிட்டு வெளியே நீ வந்தால், காவல் படையிடம் சிக்கி கொள்வாய்.'

அந்த மாணவன் ஒத்துக் கொண்டான். ஆறு மாத காலம் மட்டுமே தன்னிடம் உள்ளதை புரிந்துகொண்டு, இன்னும் வேகமாக வேலையை செய்யத் தொடங்கினான். 

முதல் மாதம்:

குருவின் மகன் தினமும் வந்து அவன் அங்கே இருக்கிறானா இல்லை தப்பித்து ஓடி விட்டானா என்று பார்த்தான்.

இரண்டாம் மாதம்:

அவன் வேலையை வேகாம முடிக்க, பட்டணத்தில் இருந்து நல்ல உளி, வாங்கிக் கொடுத்தான்.

மூன்றாம் மாதம்:

குருவின் மகன், அந்த மாணவன், அங்கே தினமும் கடின முயற்சி மேற்கொண்டு வருவதைப் பார்த்து, அவனுக்கு நன்கு சமைத்த உணவை தினமும் கொண்டு சென்றான்.

நான்காம் மாதம்:

கிட்டத்தட்ட வேலை முடிந்து விட்டதை அறிந்து கொண்டான், ஆசிரியரின் மகன். ஆனாலும் எஞ்சியுள்ள வேலையை ஒரு மாதத்தில் முடிக்க முடியுமா என்று அவனுக்கு தெரியவில்லை. குருவின் மகன், தானும் உளி முதலிய தேவையான உபகரணங்களை எடுத்துக்கொண்டு மலைக்கு சென்று தன் தந்தையைக் கொன்றவனுக்கு பாதையை அமைக்க உதவி செய்தான்.

நான்கு மாதங்கள் முடியும்போது, பாதை அமைக்கும் பணியும் நிறைவு பெற்றது. மாணவன், தான் குருவின் மாணவன் முன் மண்டியிட்டு, 'நான் கொடுத்த வாக்கை நிறைவேற்றிவிட்டேன். இனி தாங்கள் விரும்பியது போலவே எனக்கு மரண தண்டனையை அளிக்கலாம்.' என்று பணிவாக சொன்னான்,

குருவின் மகன் தன கையில் இருந்த வாளை ஓங்கிக்கொண்டே அந்த  மாணவனிடம் சொன்னான்.

"உன்னிடம் தான் நான் கடின உழைப்பு என்றால் என்ன என்று கற்றுக் கொண்டேன். நான் உன்னைக் கொள்ள வந்தபோது நீ பயந்து ஓடாமல், என்னிடம் அவகாசம் கேட்டாய். உன்னிடம் தான் உண்மையான வீரத்தை அறிந்து கொண்டேன். செய்யும் தவறுக்கு பிராயச்சித்தம் தேடும் பண்பை உன்னிடம் தான் கற்றுக் கொண்டேன். எல்லாவற்றிகும் மேலாக, கொடுத்த வாக்கை, இவ்வளவு கஷ்டப்பட்டு நிறைவேற்றும் பண்பையும் உன்னிடம் தான் கற்றுக்கொண்டேன். நீ எனக்கு குரு ஆகிவிட்டாய். நான் என்ன உன்னைப் போல குருவைக் கொள்பவனா?

என் ஆசிரியரை, எவ்வாறு நான் தண்டிப்பேன்?"